பக்கம்:அலைகள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முள் இ 79
 

 "மாமனாரும்மாப்பிள்ளையும்அப்புறம் வேணது பேசிக்கொள்ளுங்கள், சேர்ந்து கொல்லையில் நெட் கட்டி டென்னிஸ் ஆடற போதும், ஊஞ்சலில் உட்கார்ந்து ஒரே செல்லத்திலிருந்து வெற்றிலை போட்டுக் கொள்ளும் போதும். நான் பேச வேண்டியதைப் பேசித் தீர்த்துவிட்டால்தான் எனக்கும் பாரம் தீரும்."

'விமலா'-

"இது விஷயம் அப்பாவுக்கும் பெண்ணுக்குமிடையில்; நீங்கள் ஏன் தலையிடறேள்? உங்களுக்குப் பிடிக்காட்டா, மாடிக்குப் போங்கள். நம் அறையில் ஒரு சாமான்கூட நிலைகலையாமல், அப்படியே இருக்கும். அப்பா சுபாவம் எனக்குத் தெரியும்."

"விமலா- இலங்கைக்குக் கிளம்பும் முன்னால் என்ன ஒப்பந்தம் பண்ணிக்கொண்டோம்? தீபாவளிக்குச் சந்தோஷமாயிருக்க வருகிறோம். இங்கே வந்து சண்டை கிண்டைபோட்டு உன் தொண்டையைக் காட்டக்கூடாது."

“நான் ஒண்ணும் சண்டை போடவில்லை. இப்படிச் சொல்லித்தான் ஏதாவது சண்டை மூட்ட நீங்கள் அடிப்பாரம் போகிறீர்கள்-"

“Oh my God! Alright; have your own way-பிடிவாதக்காரி! வழக்கப் பிரகாரம் எப்போது ஓய்வையோ ஒய்!"

"ஆ! இப்போத்தான் நீங்கள் விமலாவைப் புரிந்து கொண்டேள்-’’

"சரியாப்போச்சு! இப்போத்தான் புரிஞ்சுகொண்டேனா? இங்கு வந்துதான் புரிஞ்சுக்கணுமா?”

"சரி நம் தர்க்கத்தை இப்போ ஆரம்பிச்சுக்கணுமா? அது வந்த விஷயத்தை விட்டுவிட்டு வேறெங்காவது, கொண்டுவிட?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/81&oldid=1144248" இருந்து மீள்விக்கப்பட்டது