பக்கம்:அலைகள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 இ லா. ச. ராமாமிருதம்

“எங்கே கொண்டுவிடும்? திருச்செந்தூரிலா, திருவிடை மருதூரிலா? இல்லை, சமயவரம் காளி சந்நிதியிலா? அங்குதான் பேய் பிடித்தவர்கள் தலையை விரித்து ஆடுவது ஜாஸ்தி! போறேன், போறேன், என்று கத்துமாம்: ஆனால், பிடித்தபின் போவதாவது!”

  • “Please –” ”

இல்லை; நீ சொன்னதற்குச் சொல்ல வந்தேன் - Alright, go ahead and for God’s sake finish Sooni”

“என்னப்பா பேசிண்டிருந்தோம்? - இப்படித்தான் அப்பா, அங்கேயும் ஏதாவது நடுவில் பேசிக் கல்ைத்து-”

“அவர் ஒண்ணும் பேசவில்லை; யாரையுமே நீ பேசவிட வில்லை. நீதான் பேசிக்கொண்டே யிருக்கிறாய்

‘never mindi இதான் எங்களுக்குப்பழக்கம். ஆt நினைப்பு: வந்தது!...முதன் முதலாய் மஞ்சள் தடவின உன் கடிதம் வந்து விஷயம் தெரிந்தது. என்னமா கோபம் வந்தது தெரியுமா, என்ன என் இடத்தை இன்னொருத்தி பிடிச்சுக்க ஆச்சா என்று? அதனால்தான் கல்யாணத்துக்கு நான் வரவில்லை.”

சார், என்ன்ைத் தப்பாய் நினைக்காதேயுங்கள். உங்கள். பெண்ணே வராதபோது உங்கள் கல்யாணத்தில் எனக்கென்ன ஜோலி?’

‘-அப்புறம் அடுத்தடுத்து நீ எழுதியும் நான் பதில் போடவில்லை. ஆனால், எப்பவுமே “டு விலே இருக்க முடி யுமா? நாள் ஆக ஆக, சபலம் அடித்துக்கொள்ள ஆரம் பித்துவிட்டது. மறுபடியும் ஒரு வரி வராதா, அது சாக்கில் தொத்திக்கொள்ளலாம்னு காத்திருந்தோம்

‘விமலா, விமலா அக்கிரமக்காரி: நாக்கில் நரம்பில்லாத வளே!--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/82&oldid=667246" இருந்து மீள்விக்கப்பட்டது