பக்கம்:அலைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள் O 81

 "என்ன என்ன?”

‘இருந்தோம் என்று பன்மையில் பேசி என்னை ஏன் இழுக்கிறாய்? அநியாயமாய் என்னை ஏன் உடந்தை ஆக்குகிறாய்? இது விஷயம் அப்பாவுக்கும் பெண்ணுக்கும் இடையில் என்று விட்டு-”

"சரி போங்களேன்!...... காத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நீ எழுதக் காணோம். வாஸ்தவந்தான்; உனக்கும் ரோசமாயிருந்திருக்கும். அப்புறம் இவர்தான் ஆசையைத் தாண்டிவிட்டார். 'என்ன விமலா, உன் அப்பாவைப் பார்க்கணும்னு உனக்கு ஆசையாயில்லையா? இந்தத் தீபாவளிக்குப் போவோமா' என்று; அவ்வளவுதான். நானே படிஞ்சு வந்துட்டேன். எங்கேப்பா காணோம்- அதான் சித்தி? புதுசா உறவு சொல்லி அழைக்கிறதுகூட என்னவோ மாதிரி வெட்கமாயிருக்கப்பா!’

‘அட, வெட்கம் என்று ஒன்று இருக்கிறது. கூட உனக்குத் தெரியுமா?”

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

'எப்படிச் சொல்கிறது? ஏன், நானே எத்தனை தடவை, அடியே பெண்கள் தலை கவிழ்ந்து நிற்பதில் ஒரு அழகு உண்டு, குரலைத் தாழ்த்திப் பேசுவதில் ஒரு குளுமை உண்டு'- என்று கெஞ்சியிருக்கிறேன்!”

“மோவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு!” அதை ஏன் விட்டூட்டேள்?”

"நான் சொல்லித்தான் தெரியணுமா? உன் மோவாவில் குழி விழுந்திருப்பதே அதனால்தானே!”

"எறும்பூரக் கல் தேயும் என்கிற மாதிரி-"

அதற்கு நீ கூட ஒரு சமயம், 'நீங்களே உங்கள் அம்மா பிள்ளையா, நீங்கள் சொல்றபடியே இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/83&oldid=1288231" இலிருந்து மீள்விக்கப்பட்டது