பக்கம்:அலைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 O லா ச. ராமாமிருதம்

 தான் அடித்திருக்கிறாய்! சித்தி, ஏன் தலைகவிழறாய்? எனக்குச் சொல்லித்தா என்று என் ஆத்துக்காரர் சொல்லுவார். இவர்தான் என் கண்-எங்கேப்பா மாப்பிள்ளை அந்தர்த்தியானம்? பல்தேய்க்கப் போய்விட்டாரா? இந்த வேளைக்கு வீட்டில் காப்பி மூணாவது 'டோஸ்' ஆகியிருக்கும். அவர் என்ன பண்ணுவார்? சித்தி, உன்னைவிட நான் பெரியவளாயிருப்பேன் என்று தான் தோணறது. ஆனால், உன்னை சித்தி என்றுதான் அழைக்கப் போறேன். இஷ்டமானால் ஏற்றுக்கொள். இல்லா விட்டாலும், ஏற்றுக்கொள். எனக்கே இப்பத்தான் கொஞ்சம் புரிகிறது, எல்லாமே கொண்டாடினால்தான் உண்டு என்று. கொண்டாடா விட்டால் விட்டுப் போய் விடுமோ என்கிற பயம்கூட வந்துவிட்டது. அப்பா, மாப்பிள்ளை சொல்வார், 'விமலா உனக்குப் பயம் தெரிந்தால் தான் உனக்கு விமோசனம், உனக்கு முன்னால் எனக்கு விமோசனம்' என்று. அந்த அர்த்தம் இப்பத்தான் மூடு சூளையாகப் புரிகிற மாதிரியிருக்கிறது. அப்பா, எனக்கு .உள்ளூறக் கவலையாயிருந்தது, முன்கூட்டித் தெரிவிக்காமலே வருகிறோமே, நீ எங்கே தலை தீபாவளிக்கு உன் மாமனார் வீட்டுக்குப் போயிருப்பாயோ என்று, சாவியை எதிர்வீட்டில் வாங்கிக் கொள்ளலாம் என்றாலும், நீ இல்லாமல் எனக்கு இங்கே என்னப்பா? எனக்கு அம்மா, அப்பா இரண்டுமே நீதானே! தூர வரும்போதே, சிங்கத்தின் பிடரிபோல், உன் தலையை ஜன்னலில் ப்ரேம் (Frame) போட்டாற்போல் கண்டப்போதான் வயிற்றில் பயணத்தின் ஜிவ்வு விட்டது. அந்த நன்றியிலேயே அப்பா எனக்குக் கண்ணில் தண் தளும்பி விட்டது.

“அப்பா, இப்போத்தான் கிட்டப் பார்க்கிறேன். நீ தான் நிஜமா மாப்பிள்ளை மாதிரியிருக்கிறாய், முகத்தில் களை கட்டியிருக்கிறது. நான் முன் பார்த்ததுக்கிப்போ பத்து வருடம் உதிர்ந்திருக்கிறது. கண் ஜ்வலிக்கிறது. என்னிக்குமே உனக்கு நிமிர்ந்த முதுகானாலும் இப்போ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/86&oldid=1288235" இலிருந்து மீள்விக்கப்பட்டது