பக்கம்:அலைகள்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முள் இ 85

உடம்பில் புது முறுக்கேறி யிருக்கிறது. தலையில் ஒரு நரை கூட இல்லாமல், லாட்டின் மாதிரி, கறுசுறுன்னு பளபளன்னு-இதென்ன, உன் ‘கு’ மாயமா, சித்தி?

‘அப்பா, மாப்பிள்ளையைப் பார்த்தபோன்னோ, எ ப் ப டி .டம்பு சரிஞ்சு போயிருக்கார்னு? நானும் உட்கார்ந்த பந்தலாய் ஆகி வறேன். எனக்கே தெரிகிறது.

“அப்பா. மாப்பிள்ளைக்கு மண்டை தெரிய ஆரம் பித்து விட்டது, எனக்கும் தலையில் சீப்பு வைக்கவே கிலியாயிருக்கிறது. கொத்துக் கொத்தாய்ப் பிடுங்கிக் கொள்கிறது. நாங்களிருவரும் ஒரொரு சமயம் கண்ணாடிக் கெதிரில் நின்று கொண்டு ஒருத்தரை பொருத்தர் தேற்றிக் கொள்கிற கண்ணதாவி எனக்கே சிரிப்பு வருகிறது; பிறத்தி யாருக்குக் கேட்பானேன்!’

போனால் போகிறது விமலா. இனிமேல் யாரைப் பண்ணிக்கொள்ளப் போறேன்?’ என்பார்.

ஆண்களைப் பற்றி அவ்வளவு தீர்மானமாய்ச் சொல்லிவிட முடியாது. இருபது வருஷம் கம்மாயிருந்து விட்டு, என்னைக் கட்டிக்கொடுத்த பின், என் அப்பாவுக்கு இப்போ தோனல்லியா-நான்தான் விட்டுச் சொல்றேனே. வயிற்றிலே பல்லோடுதான் பேசினேன்-இருந்தாலும் ஆண் பிள்ளை சிங்கத்துக்கு அழகு எதுக்கு?’ என்பேன்.

‘சிங்கமாவது. புலியாவது?’’ என்று கேட்டுக் கொண்டே மாமியார், கதவு மூலையிலிருந்த அல்லது வாசிற்படியில், அல்லது மாடி வளைவில், அல்லது பால் கனியில் தோன்றுவார். ‘மயிர்போனதால் உயிர் பிரியும் கவரிகான்கள் ரெண்டு கண்டேனோ? கீ...கீ...கீ...” ஸ்லேட்டில் ஆணியால் கிறுக்கினால் போல் க்றிச் சென்று

“ இது மாதிரிதான் அப்பா எல்லாமே. பார்க்கப் போனால் சின்ன விஷயம் தானே என்று அங்கீகரிக்க முடிவ

அ.~ 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/87&oldid=667255" இருந்து மீள்விக்கப்பட்டது