பக்கம்:அலைகள்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


88 இ. லா. ச. ராமாமிருதம்

விலிருந்து அடைகாத்து. பந்தலில் கையைப் பிடித்துக் கொடுத்து விட்டு, இவ்வளவு பெரிய வீட்டில் உன் இடம் வெறிச்சான அவர் நிலை எப்படியிருக்கும்! யாருக்கும் துணை வேண்டியிருக்கிறது. புருஷனும் மனைவியுமோ, அப்பனும் மகளுமோ தாயும் மகனுமோ, ஆணும் பெண்ணுமோ-இது ஆண்டவன் நியதி.”

எது?”

“உன்னை விட்டால் எனக்கில்லை என்னை விட்டால் உனக்கில்லை!” விமலா கையைக் கொடு; கண்ணிரையும் சிரிப்பையும் தாண்டி கண்ணை உள்ளுக்குத் திறந்து பார். ஒரு சமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம் உனக்கே தெரியும்.

“என்னை விட்டால் உனக்கில்லை உன்னை விட்டால் எனக்கில்லை ஏன் மூச்சு தேம்புகிறது?”

“நீங்கள் இது மாதிரி பேசுகையில் இன்று முழுக்க கேட்டுக் கொண்டிருக்கலாம் போலிருக்கிறது. இன்ன தென்று முழுக்கப் புரியாவிட்டாலும் இன்பமும், துன்பமு மாய் மனம் ஊசலாடுகிறது. கற்கண்டுச் சிலும்பல் ஆனாலும் குத்தாமல் இல்லையே! மனம் அலை அடங்குவதுபோல் இருக்கிறது, உடனே தத்தளிக்கிறது. நிம்மதியில்லை.”

நிம்மதி இல்லாவிட்டால் நிம்மதி அடைய வேண்டும். சமாதானம் கிட்டாவிட்டால் வலுக்கட்டாயமாய்ப் பண் னிக் கொள்.

நீ என் சண்டையானால், கான் உன் சமாதானம் கான் உன் கோபமானால், கீ என் சர்ந்தம் நான் உன் வருத்தமானால், கீ என் சந்தோஷம் இந்த முயற்சி தான், வாழ்க்கையின் எல்லாமே! - “வார்த்தைகளை எப்படிக் கொட்டறேள்! புல்லரிக் கிறது. உங்கள் நாக்கில் வாக்குப் பேசறது.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/90&oldid=667263" இருந்து மீள்விக்கப்பட்டது