பக்கம்:அலைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள் O 91



“நாளைக்குப் போயாகணும். நீ என்னோடேயே வந்தாகனும், என்னோடேயே இருக்கனும்.”

"ஈசுவரா!"

‘விமலா'

என்னை விட்டால் உனக்கில்லை
உன்னை விட்டால் எனக்கில்லை!

***

"ஹ்ஹஹ-உங்களைத் திடீர்னு பின்னால் பார்த்ததும் எனக்குத் திக்கெனத் துக்கிவாரிப் போட்டது, உட்காருங்கள். மார் படபடக்கிறது. ரெண்டு நிமிஷம். அம்மாடி! நானே இங்கில்லை. என்னென்னவோ பழசு எல்லாம் யோசனை, வீட்டு நினைப்பு வந்துவிட்டதோ என்கிறீர்களா? அப்படி ஒன்றும் இல்லை. வீட்டில் என்ன இருக்கிறது? நான் என்ன, பச்சைக் குழந்தையா? அம்மா மடியில் படுத்துக் கொண்டு பால் குடிக்கணுமா? இல்லை. நினைத்துக் கொண்டால் போய் வரும் தூரமா? உங்கள் அருகில் இருப்பதைவிட அங்கு ஒன்றும் எனக்குக் காத்துக்கொண்டு இல்லை. இன்னும் நாம் புதுத் தம்பதிகள் தானே!

"அதுவே இல்லை; என்னவோ யோசனை. யோச்னை என்றுகூட இல்லை; சில சமயம் மனம் நிரம்பியிருக்கையில் யாரோடும் பேசனும் என்றுகூட இல்லாமல் மெளனமா உட் கார்ந்துண்டே யிருக்கலாம் போல் இருக்கே, அது அப்பவும் மனம் சும்மா யிருக்கிறதோ? ஏதாவது நினைப்பில் ஒடிக் கொண்டே யிருக்கிறது; அது மாதிரி.

"விமலா வந்து ஒருநாள் முழுக்க இல்லை; போய்விட் டாள். "கலகல"வென்று அவள் இருந்துவிட்டுப் போனதிலிருந்து வீடு கொஞ்சம் வெறிச்சுனுதானிருக்கிறது. ஆனால், அதனால் என்னுடைய சந்தோஷம், சொந்த மனோலயம் தப்பிப் போய் விட்டதென்று நான் சொல்ல முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/93&oldid=1288248" இலிருந்து மீள்விக்கப்பட்டது