பக்கம்:அலைகள்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முள் இ 93

பேசவில்லை என்றுதானே? நான் நன்றி நன்றி என்பதால் வயதை ஞாபகமூட்டுகிறேன் என்கிறீர்களா? நான் ஏழை யானதால் வயது வித்தியாசத்தைப் பாராட்டாமல் உங்க ளுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டேன் என்று நினைக்கிறீர் களா? அப்படியில்லை. அப்படி இருந்தாலும் தான் என்ன? உங்களுக்கென்ன குறைச்சல்? உங்கள் வயதில் உங்கள் மாதிரி இப்போ யாரிருக்கிறார்கள்? ரிஷி மாதிரி இத்தனை நாளிருந்துவிட்டு, இப்பொழுது என் பக்கம் திரும்பி என்னை உங்கள் அகன்ற மெளனத்தில், உங்கள் கடைக்கண் பார்வை யில் என்னை அணைக்கும்போதெல்லாம், எனக்கு உடல் பறக்கிறது. திரெளபதியம்மன் விழாவில் நெருப்பு மிதிக்கிற மாதிரி மனம், உடல் எல்லாமே பரவசமாகின்றன. நான் கொடுத்து வைத்தவள் என்று உங்களிடம் சொல்லக் கூடாதா? நன்றி யிருப்பதால் எனக்கு மற்றதெல்லாம் இல்லை என்று அர்த்தமா?

“ஆனால் மற்றதெல்லாம் எத்தனை நாள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இதைப் பற்றிப் பேசுவதால் கேட் கிறேன், உடலில் திமிர் இருக்கும் வரை தானே பெண்கள்? எங்கள் வாழ்வெல்லாம் இரண்டு குழந்தைகள் பெறும்வரை. அப்புறம் நாங்கள் கிழவிகள் தானே! ஐந்து பெண்களைப் பெற்றுவிட்டு என் தாயார் எப்படியிருக்கிறாள் என்று நான் கண் கூடாய்ப் பார்க்கவில்லையா? -

“ஆனால், நிலைத்து நிற்கக்கூடியது நன்றியும் விசுவாச மும்தான். இப்போதைக்கு எனக்கு ஒரு குறைவுமில்லை, ஆனால், எனக்கு இதுதான் பெரிதாய்ப்படுகிறது. நன்றி விசு வாசம்- என் வரையில் எனக்கும் உங்களுக்கு மிடையில், எனக்குத் தெரிந்து உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இருக்கலாகாது. என் வரையில், உங்களிடம் நான் வெட்ட வெளி; எனக்கு அதுதான் பெரிசு.

நாம் வெளிக் கிளம்பினால், எந்தக் f. புடவையை உடுத்திக்கொள்வது? இந்தப் புடவைக்கு இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/95&oldid=667272" இருந்து மீள்விக்கப்பட்டது