பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ❖ லா. ச. ராமாமிர்தம்

“பிரெக்ஃபாஸ்ட் இன்னும் பதினஞ்சு நிமிஷத்தில் ரெடி
ஆயிடும். பூரிபாஜி. நீங்கள் கீழே வரேளா? நான் மேலே
கொண்டு வரவா?”

“சிரமப்படாதீர்கள். காலை உணவு பழக்கமில்லே. நேரே
மதியம் சாப்பாடு போதும்.”

‘விர்ர்’ரென்று மாடிக்குப் போய்விட்டான்.

அவள் உட்கார்ந்து கொண்டேயிருந்தாள். அப்படி
யானால் எதற்குமே அவசரமில்லை.

இந்த ஆளின் நிலைமையைச் சிந்தித்து ஆக வேண்டியது
எனக்கென்ன? அது அவா ரெண்டு பேர் பாடு. அவனைப்
பற்றி நினைக்கக்கூட எனக்கு இஷ்டமில்லை. அவனை விட
இஷ்டமான சப்ஜெக்ட் எனக்கு இருக்கு.

பாப்பூ சீக்கிரமே ஸ்னேகமாயிட்டாள்.

எதிர் வீட்டுக்குக் குடிவந்த ஒரு வாரத்துள் ஒரு மாலை,
அவள் அம்மை அவளுக்குச் சாதம் ஊட்டிக் கொண்
டிருக்கையில் வஸூவே அவர்களிடம் சென்றாள்.

“குழந்தையை ரொம்ப அழகாப் பெத்திருக்கேள்
மாமி. இன்று வியாழன். சுத்திப் போடுங்கோ. என் கண்ணே
பட்டுடப் போறது. அத்தோடு படுசுட்டியாயிருக்கும் போல
இருக்கு பேச்சைக் கவனிச்சேன்.”

“நீங்கள்தான் மெச்சிக்கணும். இந்த சோத்தைத் தின்ன
என்ன லூட்டி அடிக்கறது பாருங்கோ. ஒவ்வொரு வேளை
யும் யுத்தம்தான்.”

“நான் ஊட்டட்டுமா? பாப்பா எங்காத்துக்கு வரயா?”

“உங்காத்துலே பாப்பா இருக்கா?”

“ஏன் நான் இருக்கேனே, உனக்கு மனுஷியாப்
படல்லியா?”