பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பாப்பூ ❖ 91


“இல்லே ஆன்ட்டீ, அந்தாத்துலே ஜான், ஜோ, லில்லி
இருக்கா. நாய்க்குட்டி வேறே இருக்கு?”

“எந்த ஆத்துலே?”

“அதோ அந்தாத்துலே.”
சாதாரணமாகவே குழந்தைகள் சுட்டிக் காட்டும்
விதத்தில், அது அடுத்த வீடாயிருக்கலாம், அராபிக்கடல்
தாண்டியுமிருக்கலாம்.

அவள் அம்மை குறுக்கிட்டு “நாங்கள் ஆபீசுக்குப்
போற வழியில் ஒரு தெரிஞ்சவாகிட்ட இவளை விட்டுட்டுப்
போறோம்.”

“மாமி நான் பாத்துக்கறேனே, ஆசையாயிருக்கு. தனியா
யிருக்கேன். பொழுதே போகல்லே (அவள் குரல் லேசா
நடுங்கிற்றோ?).” ஆசையின் திணறலில் முற்றுப் புள்ளி
யில்லாமல் பேசினாள். “பாப்பா, உனக்கு என்ன வேணு
மானாலும் தரேன். சாக்லேட், பிஸ்கட், ஆப்பிள், பொம்மை
கீச்கீச்சுன்னு கத்தும். கண் சிமிட்டும்.”

“வடுமாங்காயிருக்கா? இவா ஊறுகாய் வாங்கி
வெச்சுண்டு தின்கறா. எனக்கு மாட்டாளாம். நான் குழந்தை
யாம்.”

வஸூவுக்குப் ‘பக்’கெனச் சிரிப்பு வந்துவிட்டது. அவள்
தாயிடமிருந்து குழந்தையைப் பிடுங்கி இறுக அணைத்துக்
கொண்டாள்.

வடுமாங்காய் கடிச்ச மாதிரியே ‘சுருக் சுருக்’. பேச்சில்
மழலையே இல்லை.

கன்னத்தோடு கன்னம் அழுந்துகையில், அம்மா என்ன
சுகம்டீ!

ரொம்ப சுத்தமான குழந்தை, சுபாவத்திலேயே. காரணம்