பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாப்பூ ❖ 93


லவுட்டினாள். இவற்றின் துணையில்தான் அவளுக்கு அவள்
அம்மை விதித்திருக்கும் பருப்புஞ்சாதம், தெளிவு ரஸம்
சாதம், மோருஞ்சாதத்தை உள்ளே தள்ள முடிந்தது. அவள்
அம்மைக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ? ‘சொல்
லாதே'ன்னு அவளாவே சொல்லி விடுவாளா? அதுவும்
தெரியாது. ஆனால் திருட்டுத்தனத்துக்கு உடந்தையா
யிருக்கேன். மாமிக்குச் சொல்லணும், சத்தே விட்டுப்
பிடிக்கணும்னு. கல், மண், புளி, காரம் எல்லாம் சேர்ந்துதான்
குழந்தை பெரிசாகணும்.

முழுக்க முழுக்கப் பால், மோர், தெளிவு ரஸம்,
ஃபாரெக்ஸ் மட்டும்னா இவள் மாதிரி வளர்த்தியில்லாமல்
தேஞ்சுண்டே போக வேண்டியதுதான். எல்லாம் ஒரு
குழந்தை, ஒரே குழந்தை கல்ச்சரின் விளைவு.

“பாப்பா.”

“இல்லை, நான் பாப்பூ”

“சரி பாப்பூ, உன் பேர் என்ன? பாப்பூ தானா?”

“என் பேர் சிவஜனனி.”

“உம்-புது மாதிரியாயிருக்கே!”

“என் தாத்தா ‘ஜனனி’ன்னு கதை எழுதியிருக்கா. நான்
சிவராத்திரிலே பொறந்தேன். ரெண்டையும் சேர்த்து சிவ
ஜனனின்னு டாடி பேர் வெச்சிருக்கா.”

“ஓ, அப்படிப் போறதா கதை!”

“இன்னும் பத்து நாளுலே அப்பாவும் நானும்
மெட்றாஸ் போப் போறோமே!”

“தாத்தா மெட்றாஸிலே இருக்காளா?”

தலையைப் பலமா ஆட்டினாள். “தாத்தா பாட்டி