பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ❖ லா. ச. ராமாமிர்தம்

இவர்களைப் புரிஞ்சுக்க என்னால் முடியவில்லை. வேண்ட
வும் வேண்டாம்.

பேரழகியோ? அவள் கூந்தல், நெற்றிப் புருவங்கள்,
கண்கள், கன்னங்கள், மோவாய், கழுத்து, தோள்கள்
இன்னும் கீழ் என்று உருவத்தை கற்பனையில் வெய்வது
ஒரு அர்த்தமில்லாத ஆனால் ஸ்வாரஸ்யமான வெட்டி
வேலை.

அழகுக்கு இலக்கணம் வகுப்பது சரியல்ல. அவனவ
னுக்கு எவள் ரம்பையாகப் படுகிறாளோ அழகு அத்தோடு
சரி. அதற்குமேல் அலசுவதில் அர்த்தமில்லை. ஸ்வேதா
அடிக்கடி சொல்வான். பத்து நாட்களுக்கு முன்னால்கூட

“வஸூ, ஆரோக்யம்தான் அழகு. தினம் ஆண், பெண்
என்று எத்தனை வியாதிகளைச் சந்திக்கிறேன், தொட்டுப்
பார்க்கிறேன். ஒவ்வொரு சோதனைக்குப் பின் வாஷ்பேஸி
னில் கை கழுவுகிறேன். என்ன அழகாயிருந்தால் என்ன,
எல்லாம் கரையான் புற்றுக்கள் என்கிற எண்ணம் பற்றிக்
கொண்டபின் அதை அலம்பவே முடியல்லியே. ஆரோக்யம்
தான் அழகு. இதில் எனக்கு உன்னால் எந்த தொந்தரவும்
இல்லை. அதுவே பெரும் அதிர்ஷ்டம். உன்னைப் பெண்
பார்க்க வந்த போது முதலில் எனக்கு என்ன தோன்றிற்று
தெரியுமா? என்ன ஹெல்த்தி’. அணைக்க கைநிறைஞ்சு
இருக்கா. நாட்டுக்கட்டை.”

அதை நினைக்கையில் வஸுவுக்கு அரும்பிய புன்னகை
அடுத்த நொடியே மாறி முகம் உறைந்து போயிற்று. என்ன
ப்ரயோஜனம்!

தோசைக்கல்லில் சப்பாத்தி புடைத்துக்கொண்டு
விம்முவதைக் கண்டு, வஸூவுக்கு ஏதோ ஞாபகம் வர,
ரத்தக் குழுமலில் கன்னங்கள் குறுகுறுத்தன. இந்தத் தடவை