பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாப்பூ ❖ 97

மாவு நல்ல மாவா, இல்லை பிசைந்த வாகா? ரெண்டு
சப்பாத்தி, கொஞ்சம் மோருஞ்சாதம். இதுக்கு மிஞ்சின
ராச்சாப்பாடு கிடையாது. ராஜ சாப்பாடும் கிடையாது.

இருகைகளிலும் தட்டுக்களை ஏந்திக்கொண்டு, மாடி
யேறி அறைக் கதவை முழங்காலால் இடித்துத் தள்ளித்
திறந்து உள்ளே நுழைகையில் ஸ்வேதா நின்றபடி தன்
ஸ்னேகிதனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“ஸோ தட் வாஸ் தட் ஒவ்வொருத்தனுக்கும் சுமக்க
அவன் சிலுவை இருக்கிறது-வஸூ வாவா, நீயும் இருக்க
வேண்டியதுதான். வ்யாஸிடம் நம்மைப் பற்றி சொல்லிக்
கொண்டிருந்தேன்.”

வஸூவுக்கு வெதுப்பில் தாடைகள் இறுகின. வந்தவ
னிடம் என்ன நம்மைப் பற்றி? அவள் கோபத்தை உணர்ந்து
ஸ்வேதா “சரி, என்னைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்
கிறேன்.” அவளுக்கு கோபம் அதிகரித்தது.

“ஏன், நம் அவமானத்தை இவனிடம் அலம்பி
யாகணுமா?” வாய்விட்டே வந்து விட்டது.

“வஸூ, எங்கள் நட்பு உனக்குத் தெரியாது. தொடர்பில்
லாததால் நட்பு இல்லை என்ற அர்த்தமில்லை. தன் கதையை
இப்பத்தான் சொல்லி முடித்தான். பதிலுக்கு அவனுக்குச்
சமாதானமாகவாவது என்னைப் பற்றிச் சொல்லும்படி ஆகி
விட்டது. வாழ்க்கையே உண்மையில் எதற்காக இருக்கிறது?
கண்ணீர் தனித்தனி ஆனாலும் ஒருத்தருக்கொருத்தர்
துடைத்துக் கொள்ளத்தானே இருக்கிறோம். ஸோ, வ்யாஸ்
எனக்கு நேர்ந்த விபத்து ரொம்ப அபத்தம். ஏன் வஸு
சொன்ன மாதிரி அவமானம் கூட சுவரில் பெருமாள்
படத்தை மாட்ட ஸ்டுல் மேல் ஏறி, இசைகேடாய் பாலன்ஸ்
பிசகி, ஸ்டுல் பிரண்டு, நானும் விழுந்தேன். கீழே கண்டான்
முண்டான் பெட்டியில் வாயைப் பிளந்தபடி குத்திட்டு
நின்ற கத்திரிக்கோல் உள்ளே கழுவேறிவிட்டது. என்னவோ