பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ❖ லா. ச. ராமாமிர்தம்

காப்பாற்று. நோ. அவளைப் பற்றி எண்ணம் தொடர
மறுத்தது.

தான் தனியாயில்லே. இருளோடு இருளாய் ஒரு
பிரஸ்ன்னம் அறையுள். கதவு மூடுகிற சப்தம். உடல்
வெலவெலத்தது. அது ஓடிவந்து அவன் மேல் விழுந்தது.
தோள்களை இறுகப் பற்றியது. வளையல்கள் கிலு கிலு.

“ஜோதி!” அரை நினைவில், மீதி அரை பயத்தில்
பிதற்றினான்.

“நான் ஜோதியில்லை.” காதோரம் வார்த்தைகள்
மூச்சாய்ப் பாய்ந்தன. “அவளைப் பற்றி எனக்கு அக்கறை
யில்லை. நான் பாப்பூவுக்கு வந்திருக்கேன்.”

“பாப்பூ?”
“ஆமாம் பாப்பூ உனக்குப் புரியாது-புரியத் தேவையு
மில்லை.” திடீரென மழை அறைமேல் இறங்கிற்று. பெரும்
தூறல்கள் சாரல்களாய் முகத்தில் சாட்டை பீறின. நிமிஷ
மாய் அறையின் தரை நனைந்துவிட்டது. கூரை ஒழுகி
தடதடவென மண்டை, படுக்கை நனைந்தன.

கோடை மழை. பூமி எத்தனை நாள் தாபத்தில் தவித்துக்
கொண்டிருந்ததோ? வேகமாய் உறிஞ்சிக் கொண்டது.
திகட்டித் தெறித்து எஞ்சிய மழை வெள்ளத்தில் பூமி
குளிர்ந்தது. பூமியின் மண்ணும் மணலும் ஆங்காங்கேயிருந்த
கந்தத்துக்கேற்ப, கலங்கலாயும் செவந்தும், ஸ்படிகமாயும்
சிற்றருவிகள் ஓடின. பூமிக்கு ஜூரம் விட்டு, வானின்று
இறங்கிய ஆசீர்வாதத்தில் குளிர்ந்தது.

வெளியே மழை. ஆனால் அவர்களுள்
நிகழ்ந்தது ப்ரளயம்.
நாமம் இழந்து
நேமம் இழந்து