பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாப்பூ ❖ 101

தன்தன் திக்கிழந்து யான் எனும் உணர்விழந்து உருவிழந்து ப்ரளயம் அவரவர் தனித்தனியை அழித்துத் தன்னோடு அடித்துச் செல்கையில் ஒரு சின்ன நீர்க்குமிழி அதனுள் குட்டிப் பாப்பூ பிறந்தமேனியில் கைகாலை ஆட்டியவண்ணம் கக்கடகட சிரித்துக் கொண்டே எதிர்நோக்கி வந்து வந்து- வந்து-வந்து
அதற்கு மேல் ஏதும் நினைவில்லை.
நினைவு மீண்டபோது மழை முற்றிலும் விட்டிருந்தது. நிலா காய்ந்து கொண்டிருந்தது பின்நிலா. முக்கால் நிலா.

“வா, வா, வ்யாஸ் உனக்காகத்தான் காத்துக் கொண் டிருக்கிறேன். காபி ஆறிடப் போறது.”

“நான் வரேன் ஸ்வேதா.”
“சரி, இல்லை. அதுவே சரி, வ்யாஸ்.”
வ்யாஸின் பார்வை அவனைத் தாண்டித் தேடுவதை ஸ்வேதா கண்டுகொண்டு,

“அவள் வரமாட்டாள் வ்யாஸ். ஷி இஸ் ரெஸ்டிங். அவளுக்கும் சேர்த்து உனக்குச் செலவு கொடுக்கிறேன்.”

வ்யாஸ் கதவண்டை போய் விட்டான். “வ்யாஸ்!”
வ்யாஸ் திரும்பினான். “தாங்க் யூ.”