பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொலு ❖ 103


விழுத்துடுத்து. I can't grow old gracefully. உனக்கு இன்னும் ஒரு வெள்ளி மயிர் கூடத் தெரியல்லே.”

“அதுக்கென்ன பண்ணறது. அதெல்லாம் குடும்ப ராசி. புருஷாளுக்கு ஆயிரம் கவலைகள், எங்கள் மாதிரியா? காப்பி கொண்டு வரவா?”

“இதென்ன கேள்வி?”

“இல்லே, மணி எட்டுக்கு மேலே ஆச்சே, ஒருவேளை நேரே சாப்பிட்டுட்டு, அப்புறம் குடிப்பேளோன்னு கேட்டேன்.”

“அதுக்கென்ன, அப்பவும் ஒரு டோஸ் அடிச்சாப் போச்சு. இதோ பார் பாலா, நாங்கள் காப்பிக்கு என்னிக்கும் அலுக்கமாட்டோம். T.V. விளம்பரத்துலே அந்தப் பெண் ஏமாத்தறதே BRUவை ஃபில்டர் காப்பின்னு, அதையும் குடிச்சு வைப்போம்.”

“அப்பிடி ஒரு காப்பி வெறியிருந்தால், தலை நரைக் காமல் என்ன செய்யும்?”

சமையலறைக்குள் சென்றாள். அவர்களிடையே ஒரு சுலபமான ஸ்னேகம் இருந்தது. பேப்பர் தாண்டி அவர் பார்வை, அவள் நடையில் இடையின் மிடுக்கைக் கவனித்துக் கொண்டிருந்தது. உடம்பில் ஒரு கிள்ளு சதைகூட அதிகப் படியில்லை. அவருக்கு லேசாப் பொறாமை. அடுத்துப் பெருமிதம் பொங்கிற்று. சொத்துப் பெருமிதம். இவள் என் மனைவி.

என்றுமே உருவி விட்டாற் போல் ஒரு துடிதுடிப்பு, அந்த உடலில். சோம்பலாயோ அலுப்பாயோ அவளைப் பார்த்ததேயில்லை. சதா எதையேனும் செய்து கொண் டிருப்பாள். இவளைச் சொல்வானேன், இவள் அம்மா யில்லியா, வயது எண்பதை எட்டறது, இன்றும் தானே