பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ❖ லா. ச. ராமாமிர்தம்

சமைச்சுண்டு! தினம் ஒரு கறி, கூட்டு, கீரை, சாம்பார், ரஸம் இல்லாமல் அவளுக்குச் சாப்பிடத் தெரியாது. இத்தனைக்கும் gas, ஸுமீத் போன்ற வசதிகள் இல்லை. கிராமம்.

ஆனால் இவள் சொல்றாப்போல, சுறுசுறுப்பு, யயாதீயம் எல்லாம் குடும்ப ராசி.

அவருடைய காப்பியை அவரிடம் கொடுத்துவிட்டு, தனக்கும் ஒரு தம்ளருடன், எதிரே நாற்காலியில் உட்கார்ந்தாள்.

“இதென்ன எல்லாப் பொட்டலங்களிலும், சொல்லி வெச்சாப்போல ஒரே கொத்துக்கடலை சுண்டல்? மாறுதலுக்கு ஒரு மொச்சை, நல்லா கரம் மஸாலா சேர்த்து, தேங்காயையும் துருவிக் கொட்டி..?”

“அதுக்கென்ன, வெங்காயம் போட்டா இன்னும் பேஷாயிருக்கும். ஆனால் நவராத்திரி, வெங்காயம் சேர்க்க மாட்டா. இதோ பாருங்கோ ஸார், எல்லார் வீட்டிலும், நவராத்திரின்னு ஒன்பது நாளைக்கும் கொலுன்னு பேரே தவிர, கொலு dayன்னு அழைக்கறது ஒருநாள்தான்னு இப்போ ரொம்ப நாளையப் பழக்கமாப் போச்சு. அன்னிக்கு எல்லாராத்துலேயும் கொத்துக்கடலை சுண்டல்தான். அடுத்த வீட்டில் வேற பண்ணியிருப்பான்னு ஒருத்தரையொருத்தர் ஏமாத்திக்கிறது தன்னையே ஏமாத்திக்கிறது ஒரு பொருளாதார ட்ரிக்ஸ்.”

“ஏன் பாலா, நீ ஏன் நம்மாத்துலே கொலு வெக்கப் படாது? படியிறக்கி, புதுப்பொம்மைகளா வாங்கி, பெண்டு களை அழைச்சு, தினம் விதவிதமா நைவேத்யம் பண்ணி, அமர்க்களப்படுத்தேன்! I am game for the expenses up to a thou.”