பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொலு ❖ 105

“நீங்கள் என்ன தெரிஞ்சுதான் பேசறேளா? இந்த வயசில் நானே போய், ‘என் வீட்டுலே கொலு, மஞ்சள் குங்குமம் வாங்கிக்கோங்கோ’ன்னு படிப்படியா ஏறி அழைக்கறதா? அதுக்கெல்லாம் வீட்டிலே கொழந்தைகள் இருக்கணும். உங்களுக்கே தெரியும் கொலு ஏன் வெக்கல் லேன்னு.”

பேச்சு, ‘பொட்’டென அவர்களிடையே சிப்பி போல் மூடிக் கொண்டது. உற்சாகம் குலைந்து, இம்சையான மெளனம் வந்துவிட்டது. பெருமூச்செறிந்து, எழுந்து, பேப்பரை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போய்விட்டார்.

அவள் உட்கார்ந்த இடத்திலேயே இருந்தாள். ஒரு கரப்பான் பூச்சி பறந்தது. சனியன்!

கொலுப்பெட்டி, பரணில்தான் தூங்கறது. அதனுள், இருவத்தி அஞ்சு வருஷமா, பொம்மைகள் உறங்குகின்றன. Sleeping Beauties. கையொடிஞ்சு, காலொடிஞ்சு, தலை போய், அழுக்கும் கறையும் ஏறி, எலிப்புழுக்கை, மக்கல் நாற்றம் வீசிண்டு, ஏதோ கல்வெட்டுக் கண்டுபிடிப்புகள் போல் ஆகியிருக்கும். காற்றாடுவதற்கேனும் அதை யார் எடுத்துப் பார்த்தது? இல்லை, அத்தனையும் தூக்கியே எறிஞ்சுடலாம். எதுக்கு மூடிவெச்சுண்டு இன்னும் காக்கணும்?

அன்னிக்குக் கலசத்துக்கு வெச்ச தேங்காய் உள்பட, கலசத்தின் மேல் சாத்தின அம்பாள் முகப்பு, வெள்ளியில், புன்சிரிப்புடன், அதில்தான் இருக்கும். ஏண்டியம்மா, இருவத்தி அஞ்சு வருஷமா, இன்னமும் சிரிச்சுண்டுதான் இருக்கையா?

இப்ப நினைச்சால்கூட, கோபம் கன்னத்தில் குறுகுறுக்கறது. வெட்டிக் கோபம். நம்ம கர்மாவை நாம் அனுபவிக்