பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 ❖ லா. ச. ராமாமிர்தம்

கறதுக்கு, தேங்காயையும், முகப்பையும், பொம்மைகளையும் கோவிச்சுண்டு என்ன பண்றது? ஆனால் அது தெரிய இருவத்தி அஞ்சு வருஷம் ஆகவேண்டியிருக்கு.

கையில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். விரல் நுனிகளடியில், நெற்றி மேட்டில் ஒரு தழும்பு நிரடிற்று. கவியும் மூட்டத்தினின்று தப்ப, மனம் இன்னொரு நினைவுக்குத் தாவிற்று. ஆனால் அதுவும் கொலு சம்பந்தப்பட்டதாவேயிருக்கே! ஆனால் இப்போ சிரிப்பும் வரது.

கலியாணமான புதுசு. குடித்தனம் வெச்ச புதுசு. கலியாணம் போதே, அவளுக்கு மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தன், இக்குப் பிடுங்கல் கிடையாது. அங்கும் ஒரே பிள்ளை. வாலிபத்திலேயே பெற்றோரை இழந்து விட்டார். அவள் அம்மா கெட்டிக்காரி. (அப்பா கொஞ்சம் பூச்சிதான். ஆனால் பொன்வாத்து) அதெல்லாம் ப்ளானாப் பார்த்துத்தான் செஞ்சாள். ஒரே பெண். அதனால் அம்மாவுக்கு ஆத்தோடு மாப்பிளைதான் இஷ்டம். ஆனால் பலிக்கவில்லை. மாப்பிள்ளைக்கு உத்யோகம் வெளியூரில். அப்படியே உள்ளுரில் சேர்ந்து இருந்தால்தான் என்ன? எங்கேயும் அவள் தனிகாட்டு ராஜா-அல்லது ராணியா சரி, அது எப்பிடியானும் கிடக்கட்டும்.

அன்று மஹாளய அமாவாசை. நன்னா நினைவிலிருக்கு. மத்த நாளாயிருந்தால் மறந்திருக்கும். அன்னிக் கென்னவோ சுருக்கவே ஆபீசிலிருந்து வந்துட்டார்.

“ஃப்ளாஸ்கிலே காப்பி ஊத்தி வெச்சிருக்கேன் எடுத்துக் கோங்க.”

அவர்களிடையே அது ஒன்றும் புதிதல்ல. வேளையில்லா வேளையில் காப்பிக் குடியர். கண்ணாடித் தம்ளரில் காப்பியைச் சரித்துக்கொண்டே (“சீப்பிக்