பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ❖ லா. ச. ராமாமிர்தம்

“தெரியல்லியே!”
“ரெண்டு நாள் நீங்களே சமைக்க வேண்டியிருக்கேன்ற ஆத்திரமா?”

“இதென்ன கலியாணம் ஆறதுக்குமுன் நான் சமைக்காத சமையலா?” முனகினான்.

“ஆபீஸில் டென்ஷனா?”
புரியாமல் கைகளை விரித்தான்.
“இல்லே, வேறேதேனும் எதிர்பார்த்துண்டு வந்து ஏமாந்தேளா?” அவள் ஓரக்கண்ணில் குறும்பு கூத்தாடிற்று. “தெரியல்லியே! எதுவுமே தெரியல்லியே!” மனுஷன் ஒரே அடியாய்க் குழம்பிப் போயிருந்தார். பார்க்கப் பரிதாபமாயிருந்தார்.

இனி சும்மா நோண்டி தோண்டிக் கேட்பதில் பிரயோசனமில்லை. தெரிஞ்சுதான் என்ன ஆகணும்? ஏதோ உருக்கூட மறந்துபோன பழைய ஏமாற்றம், நெடுநாள் அடக்கி வெச்சிருந்து, சோடாவில் கோலி பிடுங்கிண்ட மாதிரி, இன்னிக்கு நாள் பார்த்துடுத்து. இந்த மனோதத்துவ ஆராய்ச்சியெல்லாம் நம்மால் முடியாதம்மா!

அப்புறம் எல்லாம் சரியாப் போயிடுத்து என்றாலும், உள்ளூர அந்த அச்சம் உறுத்திக்கொண்டேயிருந்தது. க்ஷணச் சித்தம் க்ஷணப்பித்தம் மூர்க்கனிடம் மாட்டிண்டுட்டேனா? அந்த பயம்தானோ என்னவோ எந்த ஆழத்துக்கு வேர் பாய்ந்து விட்டதோ அல்லது வேறெந்தக் காரணமோ, கலியாணமாகி ஏழு வருடங்களுக்கு அவள் கருத்தரிக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் கரு சுருங்கினதோ? அப்பிடியும் நினைச்சுக்கலாம் அல்லவா? பிறகு உண்டாகியும், சுமப்பது ரொம்ப சிரமமாயிருந்தது. அதாவது, சுமக்க