பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 & லா. ச. ராமாமிர்தம்

ஒன்பது படிகளையும் கட்டியிறக்கி, அத்தனைக்கும் பொம்மைகளை வைத்து-திண்டு திண்டாய், கண்டு கண்டாய், பெரிசா, கனமா, அந்தக் காலத்து-(எந்தக் காலத்தோ?) வழிவழியா வந்த பொம்மைகள்-அலங்காரங் கள் பண்ணி-ஆள் உயரம் நிலைக் கண்ணாடி, கலர் பல்புகள், தோரணங்கள், கிரிக்கெட் மாட்ச், கோயில் குளம்-

(“அத்தனையும் நீங்கள் ஒருத்தியேவா, மாமி?”)

பாலாவுக்குக் கண் கண்டது கை செய்யும்.

குழந்தைக்கு வேற்று முகமே கிடையாது. இடுப்புக்கு இடுப்பு தாவி, சிரித்து, கொலுவுக்கு வந்தோர் எல்லோர் நெஞ்சையும் அள்ளிக் கொண்டது. “பாலா மாமி, ஒரு அரை மணி நேரம் கொடுங்கோ மாமி, அவரிடம் போய்க் காட்டிட்டு வந்துடறேன். ப்ளிஸ், ப்ளிஸ்! மாமி, மாமி!” அதெல்லாம் முடியுமா? பாலாவுக்கு நெஞ்சு பொங்கிற்று. கொலு அடியில் குழந்தையையும் வைத்து ஆரத்தி எடுத்தாள்.

அஞ்சாம் நாள் ஜன்மத்துக்கும் மறக்க முடியாத நாள்.

கொலுவுக்கடியில் ‘பார்க்’கிலிருந்து இரண்டு ஸெலு லாயிடுகளை எடுத்துக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தாள். சமையலறையிலிருந்து தீய்ந்த நாற்றம். அடுப்பில் பாலை வெச்சு மறந்துட்டேனே! உள்ளே ஓடினாள். அவசரத்தில் வெறுங்கையால் பிடித்துப் பாத்திரத்தை இறக்குகையில், புறங்கையில் பால் கொட்டிவிட்டது.

“ஐயோ!” துடித்துப் போனாள்.

உடனேயே மாடியே இடிந்து விழுந்தாற்போல், கூடத்தில் பயங்கர சத்தம். தன் வலி மறந்து வெளியே ஓடினாள்.

ஒன்பது படிகளும் அத்தனை பொம்மைகளுடன் சரிந்து-