பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கொலு ❖ 111


சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திலிருந்து ஓடிவந்து விட்டார்கள்.

“என்ன ஆச்சு?”

“ஐயோ என் குழந்தை!” அலறினாள்.

பரபரப்பாய் எல்லாரும் தோண்டி, அந்த நாசத்தினடியில்...

“மாட்டேன்! நான் மாட்டேன்!” அலறிக்கொண்டே வெளியே ஓடினாள். நாலு பேர் அவளை கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.

“என்ன மாட்டாய்?” அவளுக்கு மட்டும் அந்தச் சிரிப்புக் கேட்டது. இன்றுவரை துரத்தும் சிரிப்பு.

இப்ப நினைச்சாக்கூட அந்த சத்தம்-செவிகளைப் பொத்திக் கொண்டு தலையை உதறிக் கொண்டாள். கொலு சரிஞ்சு இடி வயிற்றில் விழுந்துவிட்டது. ‘பாவி, என்னிடமிருந்து வலுவில் பிடுங்கிண்டையே, காப்பாத்தி வெச்சுக்க வக்கிருந்ததா? மறுபடியுமா? உனக்கா? வந்து கேட்டு நிக்கறியா? நிக்காதே, ஒடு, ஒடு!’

இருவத்தி அஞ்சு வருடம் ஓடிண்டிருக்கேன். பாலாவுக்கு மூச்சு இரைத்தது. உடம்பு ஜலகண்டமாய்க் கொட்டிற்று.

கர்ப்ப கோபம் என்ன லேசா? இப்ப அடிக்கடியே தோணறது. ஒரு மாமியார், மாமனார், நாத்தனார், ஓரகத்தின்னு நாலு பேர் இருக்கிற இடமா வாழ்க்கைப்பட்டிருந்தால் இப்படி ஆயிருக்காதோ? குழந்தையைக் கொலு அடியில் தவழ்ந்து போக விட்டிருக்க மாட்டார்கள். யாரேனும் ஒருத்தர் கூடத்திலிருந்திருப்பர்.

என்ன கொலுப்படிகள்! உளுத்துப் போன பெட்டிகள்,