பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொலு ❖ 113

“உங்களிடம் ஒண்ணு சொல்லணும்.”

“சொல்லேன்.”

“இது ரொம்ப நாளைக்கு முன் நடந்தது. நமக்குக் கலியாணமான மூணாம் வருஷம் வெச்சுக்கோங்களேன்.”

“இதோ பார் பாலா, சினிமா பண்ணாதே, எப்பவோ ஏதோ நடந்ததுக்கு நீ இப்போ பிராயச்சித்தம் பண்ணிக்க வேண்டாம். அதுக்கெல்லாம் நமக்கு வயசு தாண்டியாச்சு”

“அதனாலேதானே இப்ப சொல்றேன்! அப்பவே சொல்லியிருந்தால், நீங்கள் ஏதேனும் கல்மிஷமா எடுத்துண்டிருக்கலாம்.” உடனே அவசரமா, “ஆனால் தப்பு ஏதேனும் நேர்ந்துடல்லே.”

“அப்போ சொல்லாதே.”

“சொல்லித்தான் தீருவேன்.”

சிரித்துவிட்டார்.

“இப்ப எனக்கும்தான் வேடிக்கையாயிருக்கு. ஆனால் வேடிக்கையாவுமில்லே. அதில் ஏதோ ஸீரியஸ்னெஸ் ஒளிஞ்சிண்டிருக்கு. உறுத்தறது.”

“O.K. Shoot”

“அதுவும் கொலு சம்பந்தப்பட்டதுதான். இன்னிக்கு எனக்குக் 'கொலு'day போல இருக்கு. அப்ப நான் பிறந்தாத்துலே இருந்தேன். நீங்களும் வந்திருந்தேள் ஆயுத பூஜை ரெண்டு நாள், ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து மூணு நாள் சேர்ந்தாப்போல லீவு. ஆனால் கொலு சமயத்திலே நீங்கள் வீட்டில் இல்லை. 'வாக்' போயிட்டேள்.

என் பாட்டு வாத்தியாரும் வந்திருந்தார். ஊரிலிருந்து வந்திருக்கேனே, என்னைப் பார்க்கத்தான்.

ஒருவழியாப் பெண்டுகள் பாடி முடிச்சப்புறம்-காமா