பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

கமலி



இது ‘இந்தியா டுடே’யில் வந்தது. ஆனால் இதன் ‘கரு’ என்னுடையது அல்ல எனதருமை நண்பர் சங்கரன் இந்தக் கருத்தை என்னிடம் தந்து நான்தான் எழுதவேண்டுமென்று வற்புறுத்தினார். அவரும் அமரர் ஆகிவிட்டார். சங்கரனுக்கு பிரத்யேகமாக இந்தக் கதையை இந்த இடத்தில் சமர்ப்பிக்கிறேன்.

மலாம்பிகே!” ஜம்பு குருக்கள் துண்டை உதறிப் போட்டுத் திண்ணைமேல் உட்கார்ந்தார்.

பெயரைச் சொல்லிச் சொல்லி, அது மூச்சோடேயே கலந்துபோய், மூச்சும் நாமமும் வேறென்று நினைக்கவே மறந்து போச்சு.

அம்மன் சன்னதிக்கு வெளியே சுவரை ஒட்டி ஒரு திண்ணை, அதில்தான் அவர் ஒழிந்த நேரங்களில் உட்காருவதும், சமயங்களில் இரவு படுப்பதும் வழக்கம். இன்று (பௌர்ணமி மட்டும்) நடு நிசியில், கர்ப்பக்ருஹத்தில் ஒரு சந்துவழி, சந்திரன் அம்மன் முகத்தை வியாபிக்கும்போது அவள் கண்கள் விழித்தெழுவதுபோல மாயங் காட்டுவதற்குக் காத்திருப்பார். அவருக்கு அது கண்கொளாக் காக்ஷி.

கமலாயதாக்ஷி.

ஏனோ தெரியவில்லை. மனது அலசிப் பிழிந்து