பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ராசாத்தி கிணறு ❖ 3

“அவர் குகையைவிட்டு வெளியிலே வரதில்லியே!”

“வராட்டி என்ன? ஒருநாள் வெளியிலே நிக்கறதைப்
பார்த்தேனே. பத்தாதா? அந்தக் கோலத்தைப் பார்க்க
ஆயிரம் கண் வேனுமா? ஊர்லே நாலு ஆளைக்கூட்டி
ஊரைவிட்டே விரட்டி அடிக்கணும்னு நெனச்சிட்டிருக்
கேன். இன்னும் வேளை கூடல்லே. நிச்சயம் ஒருநாள் நடக்கத்
தான் போவுது. ஆனால் நிச்சயம் நீ அவன்கிட்டக் கூடப்
போவக் கூடாது. எத்தினிவாட்டி சொல்றேனோ எனக்குக்
கணக்கு மறந்து போச்சு. ஆனால் அதுதான் உனக்கு ஆவத்து.
தெரிஞ்சுக்க! இன்னிக்கு ஆளுக்கு என்ன படையல்?”

“மிளகுப் பொங்கல் கொஞ்சம் ஆக்கிக்கொண்டு
போனேன். பாத்தா பாவமாயிருக்குது.”

“இருக்கும்! இருக்கும்!”
“ஒண்ணுமே துண்ணமாட்டேன்றாரே. தானாவும் கேக்க
மாட்டாரு. கொடுத்தாலும் இரை எடுக்க மாட்டேன்னாரு.
அப்புறம் நொம்ப கஸ்டப்பட்டு ஏதோ நம் கஸ்டத்துக்காகக்
கொஞ்சம் லேசா சிரிச்சுகிட்டே காத்தையே உண்டுகிட்டு
சிலபேர் தவங்கிடப்பாங்களாம்.”

“நீ சொல்றே! ஆள் குகை இருட்டிலே எந்தக் கோழியை
ரக்கையைக்கூடப் பிய்க்காமே உள்ளே தள்ளறானோ?”

அவளுக்குக் கண்கள் பெருகின. “உன் பேச்சை இத்தினி
கேட்டதனாலேயே எந்தப் பாவத்துலே போறேனோ?”

“நிறுத்தும்மே!” சீறினான். “நானும் பாத்துட்டேன்.
எங்கே நாலு பொட்டச்சி சேர்ந்துட்டாங்களோ இந்த சாமி
யார் பாடுங்க கொண்டாட்டந்தான். அதுவும் சடையும் முடி
யும் தொப்புள்வரை தாடியுமாச்சுன்னா இன்னும் மஜாக்கு
தான். ஏதோ இந்தக் கிராமம் சின்னதா மலையடிவாரத்துல
யார் வம்பும் தும்புமில்லாமே தன் பயிர் தன் மக்களுண்