பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கமலி ❖ 131


“அப்பா, அப்பா! அவரைக் காணோமே!”-இரண்டு கைகளையும் விரித்தவண்ணம் அவள் கதறுகையில், பிரமிக்கத்தக்க அழகில் பொலிந்தாள்.

ஐயர் எட்டிப் பார்த்தார். கர்ப்பக்ருஹத்தில் லிங்கத்தைக் காணோம்.

‘ஆண்டவா ஆண்டவா!’ கதறிக்கொண்டே வெளியே ஓடினாள். குருக்களும் கத்திக்கொண்டே தொடர்ந்தார். “இங்கே லிங்கம் இல்லை. அம்மன் சன்னதியில் மத்யானத்திலிருந்தே மூலவர் இல்லை. ஐயோ என்ன செய்வேன்!”

“என்ன செய்வேன்! என்ன செய்வேன்!” அழுது கொண்டே, தன்னை அழுத்திய துக்கத்தைத் திமிறிக் கொண்டு குருக்கள் விழித்தெழுந்தார். உடல் பூரா வேர்வை ஸ்நானம். கண்ணைக் கசக்கிக்கொண்டார். எழுந்து உட்கார்ந்தார். கனவின் பீதி தெளியவில்லை. இருக்கிறாளா? இருந்த இடத்திலிருந்து எட்டிப் பார்த்தார்.

கர்ப்பக்ருஹத்தில், சந்து வழி, சாய்வாட்டில், அவள் முகத்தில் நிலாவின் வியாபரத்தில் சிரித்துக்கொண்டிருந்தாள்.