பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டப்படாதவர்கள் ❖ 433


துரத்திக்கொண்டு, அல்லது குந்துமணி பொறுக்கிக்கொண்டு, அல்லது இந்த அடவியை ஒட்டினாற்போல் அதோ தெரியும் குன்றைச் சுற்றிக்கொண்டு இங்குதான் எங்கேனும் இருப்பான். காற்று மறுபடியும் முகத்தை வருடிக் கண்கள் சொக்கும். தந்திக் கம்பங்கள் தோப்பின் குறுக்கே சென்று, தாலாட்டு ரீங்கரித்தன. நீர்க்குடம்போல் நினைவோட்டத்தில் சுகமாய் அமிழ்ந்தாள்.

இந்த இடத்திலேயே ரத்தோஷ்ணம்போல் ஒரு கதகதப்பான ஆதரவு இருந்தது. இடத் தாவரத்தின் தண்மையில் நடுவெய்யிலின் வெம்மை மிருதுவாகி உடலும் மனமும் ஒருவிதமான போதையும் சோம்பலும் கண்டன. வேளாவேளைக்கு யாரேனும் காபியும் உணவும் கொணர்ந்து, இந்த சுகநிலை கலையாமல் ஊட்டிவிட்டால் எப்படியிருக்கும்! ஆனால் நடக்கிற காரியமா? இதோ வெயில் லேசா மஞ்சள் பூக்க ஆரம்பிச்சாச்சு வேலைக்காரி வந்துடுவா. அடுத்தாற் போல் அவர்.

தோளை யாரோ குலுக்கறா. மனமில்லாத மீட்சியில், விழிகள் கோபத்தில் உறுத்தின. யாரு?

“அக்கா எங்கே?”

“வந்துடுவா. விளையாடப் போ.”

“அப்பிடித்தான் தினமும் சொல்றே!” சீற்றத்தில் அவன் கண்கள் நெரிந்தன. “அக்கா எங்கே?” கடைவாயில் எச்சில் வழிந்தது.

அவன் முதுகைத் தடவினாள். “வருவாள், வருவாள்.”

அவன் கண்கள் கோபம் மறந்து குழப்பம் கண்டன. மல்லர்களின் தழுவல்போல் அவர்களின் பார்வைகள் ஒன்றுடனொன்று பின்னின.

அவனிடம் அவளுக்கு உள்ளூர அச்சந்தான். இவனைக்