பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராசாத்தி கிணறு ❖ 5

மில்லை. தைரியம் யாருக்குமில்லை. கும்பலும் கூச்சலும்
வாசலைச் சுற்றிக் கூடிவிட்டன. இன்னமும் கூடிக் கொண்
டிருந்தன.

குகை வாசலினின்று கூவினான்.

“ டேய் ஒன் சாதிக்குப் பிறக்காதவனே. வாடா வெளியே.
காட்டிக்கிட்டு திரியறயே. இன்னிக்கு உன் குஞ்சை மிளகாய்த்
துாளில் தோய்ச்சு உன் தலையைச் சீவ வந்திருக்கேன்.”

“ஒரு பாவமும் அறியாத ஒரு பெண் பிள்ளையைக்
கொலை வாங்கிட்டே!”

“யாராலேடா, வாடா வெளியே.”

“தாராளமா வரேன். ஆனால் நீ என்னை ஒண்ணும்<
செய்ய முடியாது. உன் கையை எனக்கெதிரே தூக்கிப் பார்.
துக்காது.”

அந்த ஆள் சொன்னபடியே வெளிப்பட்டான். கிழவன்
திகைப்பாகி விட்டான். கையைத் தூக்க முடியவில்லை.
அரிவாள் கை நழுவி விழுந்து பாறாங்கல்லில் தடுக்கி
இரண்டு மூன்று தடவை குதித்து அடிவாரத்தை அடைந்து
அங்கு பரிதாபமாய் கிடந்தது. காலை வெய்யலில் கூர்
பளபளத்தது.

“என் பெண்சாதி சாவ யாருடா காரணம்?”

“நானும் இருக்கலாம். இல்லைன்னு சொல்ல, எல்லாந்
தெரிஞ்சவனாலும் சொல்ல முடியாது. ஒருத்தருக்கொருத்தர்
முகாந்தரமானாலே நல்லது பொல்லாதது ரெண்டுத்துக்குமே
சம்பந்தப்பட்டவங்க எல்லாருமே காரணம்தான்.”

“உன் பாசையைப் போட்டுக் குழப்பாதே. அது ஒண்ணு
தான் பாக்கி. ஆனால் அந்த சாமர்த்தியமெல்லாம் என்
னண்டை செல்லாது. தெரிஞ்சுக்க. அரிவாள் போச்சுன்னா