பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 ❖ லா. ச. ராமாமிர்தம்


 என்று மாற்றிக் கொண்டார். அதனால்தான் பிறந்தது பெண்ணானாலும் கிருஷ்ணா. ஏன், கிருஷ்ணம்மா என்று பேர் இல்லையா?

உஷையின் பெயரை ராதையென்று மாற்ற முயன்ற போது, அவள் கண்டிப்பாகி, "எனக்குப் பிறந்தகத்தில் வெச்ச பேர் போதும். அதன்படியே விடிவு வரட்டும். இன்னொரு பேரா? No."

பொதுவாக என்ன தெரிகிறது? அணுகுமுறைகள் வெவ்வேறாய் மேலுக்குப் பட்டாலும், சேருமிடம் ஒன்றுதான். அதாவது விலக்க முடியாததை அனுபவி. கடிக்க முடியா விட்டால் முழுங்கு.

கூடவே இன்னொன்று. சுயநலமோ, விதியோ என்ன வேணுமானாலும் அழை. அவனவன் தன் தன் தீவில்தான். John Donne.நீ ஏமாளி, இல்லாட்டி ஏமாத்தறே. Everyman is an Island. உஷை, B.litt.

கிருஷ்ணா, அம்மா மாதிரி படிக்கவில்லை. அவளுக்குப் படிப்பு ஏறவில்லை. S.S.L.C.யிலேயே ரதம் சாய்ந்து விட்டது. அம்மா மாதிரி அறிவுஜீவியுமில்லை. பாத்திரம், சமையல் என்று வீட்டு வேலை கொடுங்கள். மாங்கு மாங்கென்று செய்து கொண்டிருப்பாள். பெரிய அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும், கண்கள் அவளுடைய Plus பாயிண்ட். ஆரோக்யமான கட்டு உடல். வயதுக்கு உயரம் கூடுதல். அவளை விட உயரமான ஜாதகன் தேடுவது சிரமமாய்த் தானிருந்தது. அப்படியும் பெண் பார்க்கும் படலங்கள் நடந்தன.

"பெண் உத்யோகம் பண்றாளா? இல்லையா? பரிசம் வேணா கூடாது. பெண்ணின் உத்யோகம் சீர்வரிசை