பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

சூரம்சம்ஹாரம்





"ஏறுமயி லேறிவிளை யாடுமுகமொன்றே!"

"சபாஷ்!"

மாறுபடு சூரரை வதைத்தமுகமொன்றே!"

"சபாஷ்!"

"கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகமொன்றே!"

"சபாஷ்!"

"குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகமொன்றே!"

"சபாஷ்!"

"சூரனே, சூரனைப் புறங்காட்டும் சுப்ரமண்ய தீரனே!"

"சபாஷ்!"

ஜல்! ஜல்!! ஜல்!!! ஜல்!!!!

எட்டுப் பேருக்கும் கடைசியில் முற்றுப்புள்ளி வைத்தாற் போன்ற அச்சிறுவனின் குரலோசையும். காற்சிலம்போசையும்தான் தூக்கி நின்றது.

உண்ணாமலை, பிள்ளையார் கோவில் சந்து முனையில், பெற்ற மனம் குளிர்ந்து பொங்கி வழிய, கையில் மதுரைச் செம்பை ஏந்திய வண்ணம், ஊர்கோலத்தின் வருகையை எதிர்ப்பார்த்து நின்றாள். அவள் நாட்டம் பிள்ளையை விட்டுப் பிரிந்திலது.