பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 & லா. ச. ராமாமிர்தம்

அவன் கண்களில் அலட்சியமும் கோபமும் ஒருங்கே எழும்பின. -

“இதுக்குத்தான் கூப்பிட்டியா? சம்மாரமும், அதுவுமா? பச்சைத் தண்ணி கூட வாயிலே வார்க்கக் கூடாதுன்னு இருக்கச்சே, ஒன்னே யாரு காப்பித் தண்ணி யெடுத்தாரச் சொன்னது? போம்மா, வேலையில்லே!” என்று முறைத்து விட்டுப் போய் ஊர்வலத்துடன் கலந்து கொண்டான்.

“ஏண்டா சக்திவேல், ஒங்கம்மா என்னாத்துக்குக் கூப்பிட்டாங்க?” என்றான் அவன் பக்கத்தில் நின்ற வீரன். “காப்பித் தண்ணியாம், அவங்களுக்கு வேறே வேலை யில்லே!”

“அடப் பாவி, விட்டுட்டு வந்துட்டியா! என்னைக் கூப்பிட்டிருந்தா, நானாவது குடிச்சிருப்பேனே. கத்தற கத்தலுக்குத் தொண்டையாவது நனையுமே!” என்று சின்னாண்டி வருத்தப்பட்டான்.

சக்திவேல், வெறுப்புடன் அவனை ஒருமுறை பார்த்து விட்டு, வாய் பேசாமல், காலை இன்னும் கொஞ்சம் விசிறிப் போட்டு நடந்தான்.

பத்து வயது இன்னும் பூரணமாக நிரம்பவில்லை. அவன் மண்டையில் இப்பொழுதே “ஒரே ஒரு ஊர்லேருந்து என்று ஆரம்பிக்கும் பழைய பாட்டன் கதையிலிருந்து “அகோ வாரும் பிள்ளாய்’ என்று ஆரம்பிக்கும் புராணிகர் பிரசங்கக் கதை வரையில் நிரம்பியிருந்தது. தன் விரதத் திற்குப் பங்கமில்லாமல் தப்பித்துக் கொண்டதில் பரம சந்தோஷம். பெரியவருடன் பெரியவனாய் விட்டதாய் அவனுள் எண்ணம். இறுமாப்புடன் மேல் நடந்தான்.

இரு மருங்கிலும் கூட்டம். முன்னால் தீவட்டிகள் ஜ்வலித்துக் கொண்டு சென்றன. மைசூர், அவைகளுக்கு