பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 * லா, ச. ராமாமிர்தம்

வைத்திருக்கும் திக்கு நோக்கி நடையும் ஒட்டமுமாய்ச் சென்றனர்.

“அடே பசங்களா! சண்டை கிண்டை போடாதீங்க. ஆளுக்கொரு தலை!”

அவனுக்கொன்றும் காதில் விழவில்லை. அவன் கண் கண்டது கைக் கத்தியின் பளபளப்புத்தான்; காது கேட்டது, வீராவேசத்துடன் தன் நெஞ்சிலிருந்து குமுறிக் கொண்டு வரும், சபாஷ்! சபாஷ்! சப்தந்தான்.

“கடல் சுவற வேல் விட்ட கார்த்திகேயனே!”

“சபாஷ்!”

வீரர்களுள் மூத்தவன், ஒடோடியும் சென்று, சூரன் தலையை வெகு லாவகமாய், அப்படியே கத்தியால் கொந்தி யெடுத்தது வெகு அழகாயிருந்தது. அப்படியே, மற்றைய எட்டுப் பேர்களும் பின் தொடர, பகவான் சன்னதிக்கு ஒரே ஒட்டம்.

“அவுணர் குலம் அழிய வந்த ஆறுமுக தேவா!’

அt—lfrவி: p.

“தேவர் சிறை மீளவந்த தேவதேவா!’

“சபாஷ்!”

‘ஜல ஜல ஜலவென இடுப்புச் சதங்கையும் காற் சிலம்பும் குலுங்கின.

“சபாஷ்!”

சுவாமியைப் பிரதட்சணம் செய்து அவர் சன்னதியில் அத் தலையைச் சமர்ப்பிப்பது போன்று கீழே வைத்து நமஸ்கரித்தனர். உடனே கற்பூர ஹாரத்தி. சக்திவேலின் உடல்

பரபரத்தது. உடனே மறுபடியும் உயரத் தூக்கிப் பிடித்த