பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ராசாத்தி கிணறு ❖ 7

“அப்படின்னா விளங்கச் சொல்லுடா. பட்டி மவனே.”

“ஒரு காரியம் என்னை நிறுத்தி வெச்சிருக்குன்னு
சொன்னேனே. அதுக்கு அவளும் காரணமாயிருக்கலாம்.
ஒரு காரியம் கூடணும்னு அது ஒருத்தராலே மட்டுமில்லே.
முன்னது பின்னது நமக்குத் தெரியாதது எல்லாமே சம்பந்தப்
பட்டுத்தான் உரு ஆவுது.”

“என்னடா சொல்றே தா-ழி. மண்டை கொதிக்குது.”

“வேளை வந்துட்டுது. நீயே என்னிடம் வருவே. அப்போ
சொல்றேன்” உள்ளே போய் இருளோடு கரைந்து போய்
விட்டான்.

கிழவனுக்கு வாயில் நுரை கக்கிற்று. நெற்றியைத் தட்டிக்
கொண்டு கீழே போனான்.

அதற்குள் வாசல் பெருந்திண்ணையில் அவன் பெண்<
சாதியை வளர்த்தாச்சு. குளிப்பாட்டி புதுசு உடுத்தி, நெத்தி
யில் பலாகாயாட்டம் குங்குமமிட்டு முவத்திலும் வாயிலும்
அப்படி மஞ்சள் பத்தி முந்தானையிலே மஞ்சளும் தேங்கா
யும் முடிச்சு சுத்தி குந்திக்கிட்டு பாட்டு வெச்சு அழுவாளுங்க.
வாசல்லே ஜேஜேன்னு பொம்பளைங்களும் ஆம்பளைங்
களும். துண்டை உதறிப் போட்டுக் கொண்டு திண்ணையில்
உட்கார்ந்தான்.

அவனைக் கண்டதும் அழுபவர் பொட்டென அடங்கிப்
போயினர். கையிலே கத்தியைக் காணோம். இன்னும் என்ன
பண்ணிகிட்டு வந்திருக்கானோ தெரியல்லையே! பார்த்
தாலே பயம்மாயிருக்கே ஒவ்வொருத்தராய் நழுவத் தொடங்
கினர். கடைசியில் சில்லறையாக ஒரு சிலரே தங்கினர்.

அந்த முகத்தில் இடிபட்ட நோவு தெரியவில்லை.
அமைதியே தெரிந்தது. எதையோ கண்டுவிட்ட அமைதி. ஏ
புள்ளே இதுவரை எத்தினிவாட்டி ஒன்னை மொத்தி