பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ல் லா. ச. ராமாமிர்தம்

“கொடிய சூரன் உயிர் குடிக்க வந்த கூர்வேல்!”

FLYஷ் p”

பகவானின் நெற்றித் திலகம் மின்னியது.

“கதிர்வேல்!”

“சபாஷ்!”

பகவான் கண்கள் உயிருடன் மின்னின. கருணையுடன் சக்திவேலை நோக்கின. சக்திவேலின் மார்பு விம்மியது. அவர் தன் நோக்கின் வழியே, அவனுள் தன் சக்தியைச் செலுத்தியதை அவன் ஸ்பரிசித்தான்.

“மணிவேல்!”

“சபாஷ po

“மாணிக்கவேல்!” ஆகர்ண பரியந்தம் நாணை இழுத்தார்.

“சபாஷ்

“சக்திவேல்’ வேல் வில்லை விட்டுப் பிரிந்தது. சக்தி வேல் சக்தி வேலானான்.


“சபாஷ்!”

சக்திவேல் யுத்த களத்தில் பாய்ந்து விட்டான். அவனுள் எழும்பிய அப்பெரு அலை கரையெல்லாம் தகர்த்துத் தூக்கி யெறிந்தது.

கூட்டத்தின் பெருங்கோஷமெல்லாம் அவனுக்கு யுத்த கோஷமாய் விட்டது.

“இப்படியாக அந்த சூரபதுமனுக்கும் பால சுப்ரமண்யப் பெருமானுக்கும் நடந்த அந்த மகாயுத்தத்திலே, கவந்தங்கள் ஆடின. கழுகுகள் வட்டமிட்டன. இரத்தம் ஆறாய்ப் பெருகிற்று. அஸ்திர சஸ்திரங்கள் மழையாய்ப் பொழிந்தன.