பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரசம்ஹாரம் * 161

சரக்கூடு சூரியனை மறைத்தது. சற்குரு சாமிக்கு ஜே!” என்று புராணிகர் பிரசங்கித்த காட்சியெல்லாம் அவன் இப் பொழுது பிரத்தியக்ஷமாகக் கண்டான். அவனே பாடிக் கொண்டு கிளம்பினான்.

“மாயமலை பிளந்த மணிவேல்!”

“சபாஷ்!”

“சிங்கனைச் சிதைத்த செவ்வேல்!”

“சபாஷ்!”

‘மாமரமது பிளந்த மணிவேல்!”

“சபாஷ்!”

‘சனன மரண மறுத்திடும் சக்தி வேல்!”

“சபாஷ்!”

“சக்திவேல்!”

“சபாஷ்!”

சக்திவேல் பறந்தான். அவன் கால் கீழ்ப்பட்டதாக அவனுக்குத் தெரியவில்லை.

மைசூர் பல்லை இளித்தான். “ஓஹோ, நம்ப சின்னத் துரை வராரோ? என்று பரிகசித்து, வேண்டுமென்று குறும்பாக, சூரன் கழுத்தின் மேல் கடைசித் தலையை மாட்டுவதற்குப் பதிலாகத் தன் தலையைச் சூரன் கழுத்தின் மேல் நீட்டிக் கொக்கரித்தான்.

“இப்படியாக, பகவானானவர் வேலாயுதத்தை மந்திரித்து விட்டவுடன், அந்த வேலாயுதமானது, திகுதிகு வென்று திக்குகளையெல்லாம் எரித்துக் கொண்டு, கடகட வென்று அண்டங்களெல்லாம் ஆட, திடுதிடுவென்று அஷ்ட கஜங்கள் பயந்து ஒட, கரகரவென்று சுழன்று கொண்டு.”