பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 & லா. ச. ராமாமிர்தம்

“மாயமது அறுத்திடும் மெய்ஞ்ஞான வேல்!” “சபாஷ்!” “சூரனுயிர் கொள்ளை கொள் பரிசுத்த வேல்!” “சபாஷ்!” யாருக்கும் இன்னதான் நடக்கப் போகின்றது என்று தெரியவில்லை. கண்ணிமைத்து, கண் திறப்பதன் முன், மைசூர் தலை மண்ணில் புரண்டது. அவனுக்குத்தான் எப்படி அவ்வுடல் வன்மை வந்ததோ? அவ் வெண்ணெய் வெட்டும் கத்திக்குத்தான் எப்படி அவ்வளவு கூர்வந்ததோ தெரியவில்லை.

“ஹோ ஒ ஒ p” ஒரே கோஷம், தேவர்களின் ஜயகோஷம், சூர சம்ஹாரம் ஆய்விட்டது.

“குக்குடக் கொடி கொண்ட மயில் வாஹா!” “சபாஷ்!” அவனையுமறியாமல் மேலடிகள் அவன் வாயை விட்டுக் கிளம்பின.

“வெஞ்சூர் உயிர் களைந்து, குஞ்சரியை வேட்ட வேல்முருகா!” “சபாஷ்!” பதினாயிரம் கைகள் அவனை ஒரே சமயத்தில் பிடித்து அமுக்கியது போன்றிருந்தது. மூச்சுத் திணறியது. அவனை லேசில் கட்டிப்பிடிக்க முடியவில்லை. பயங்கரமும் திக் பிரமையும் நிறைந்த ஒரே கூச்சல். ஒரே கலவரம்.

‘உண்ணாமலை மகனுக்குப் பைத்தியம் பிடிச்சுகிச்சு!”