பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திலோ

தாக்குதலுக்குப் பயந்து மக்கள், கடலோரப் பகுதி களிலிருந்து நாட்டின் உட்புறத்துக்கு ஓடினார்கள். கோட்டை யில் பீரங்கிகள் கடல் முகம் திரும்பித் தயாரில் நின்றன. ஆகாயங்களில் ராப்பகலாய் விமான ரோந்து. கப்பல் கப்பலாய்த் துருப்புகள் இறங்கி நடமாடின. வாயடைப்பு. அவசரச் சட்டங்கள். உன் நண்பனே சத்துருவாய் இருக்கக் கூடும். யாரையும் நம்பாதே ஏன், நீயே அவனாய் இருக்கக் கூடாது?

பட்டணம் வெறிச். எதிரும் புதிருமாய்க் காலி வீடு களின் வரிசைகளினிடையே தெருத் தெருவாய், ஒர் ஆசாமி கூடக் கண்ணுக்குப் படாமல், மணிக்கணக்கில், தன்னந்தனி யாய் நடந்து செல்லலாம். உன்னைக் கண்டு நீயே பயந்து போவாய். சென்னைக்குச் சாவுக் களை வந்துவிட்டது.

பகலே இப்படி ஆயின், இரவு ஏன் வருகிறது? ஆனால் இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் ஒன்றும் தெளிவா யில்லை. பகலில் சில பயங்கள் பார்வைக்குத் தெரிகின்றன. இரவில் கண்ணுக்கும் புலப்படா. பயங்கள். பயம், பயம், பயம். மயம். மயம். மயம். பயத்தைத் தொட்டுவிடலாம் போன்ற பரிமாணத்தில் பிரம்மாண்ட சிலிர்ப்பு கண்டது.

ஆகாயத்திலிருந்து மின்னல்கள் விழுந்தாற்போல, பூமி யில் அந்தப் பள்ளங்கள் (trenches) பாளம் பாளமாய்த்