பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 : லா. ச. ராமாமிர்தம்

மாலைச் சூரியன், அழுத களையில், மொட்டை மாடி

களினிடையே விழுந்து கொண்டிருந்தான்.

என்னைத் ‘திலோன்னு அளைப்பாங்க. நொம்ப நாளைக்கு அப்படின்னா என்னான்னு தெரியாது. லச்சுமி, முனியம்மா, காத்தாயி, ராஜாத்தி, ரேணுகா என்கற மாதிரி பளகின பேராயில்லேன்னு தெரியது.கண்டி, அறிஞ்சுக்க அக்கறையுமில்லே.

அப்புறம் ஒரு நாள் பேரம் ஒண்ணு என்னைப் பேர் கேட்டது. எல்லாமே பேர் கேக்குதா? வந்தோமா, வேலைய முடிச்சோமா, மூஞ்சிலே முக்காடு போத்திக்கிட்டு ஒடினோ மான்ன அவசரத்துலே தானே வருதுங்க! எங்கே விட்டேன்? ஆ பேர் கெட்டுது. “திலோ? ஒ திலோத்தமையா? அட பேருக்கேத்தாப்பிலே தான் இருக்கே என்ன முளிக்கறே? ரம்பை, திலோத்தமை கேட்டதில்லேயா?”

ரம்பை கேட்டிருக்கேன். ‘அட பார்றா இவளை! ரம்பைன்னு நெனப்போ?ன்னு ஒத்தரையொத்தர் ஏசிப்போம்.

“திலோத்தமை ரம்பையை விட அழகு. அவளுக்குத் தனிக்கதையே இருக்கு சரிசரி, கதைக்கிப்போ நேரமில்லே.” அட, சொல்லாட்டிப் போயேன். கதை வேணும்னா, மூணுமணியாட்டத்துக்குப் போறேன். ஆனா, ஆறுமணிக்குத் திரும்பிடணும். தொழிலுக்குத் தயார் ஆவணுமில்லே, சீவி, முடிச்சிசிங்காரிச்சு

ஆனா ஒண்ணு. என் பேர் என்னென்னு தெரிஞ்சிக் கிட்டப்புறம் நான் கொஞ்சம் ஜிலுக்குக் கூடத்தான். அப்பப்போ கைக் கண்ணாடிலே பார்த்துப்பேன். புருவத் துலே மை இன்னும் கறுப்பா தீட்டிக்கிட்டேன். உதட்டுலே சிவப்பு கூட பூசிக்கிட்டேன். உம், இப்ப பேட்டை சக்களத்