பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 2

திலோ & 167

திங்க என்னண்டை என்ன செஞ்சுக்க முடியும்? கண்ணாடி தான் சொல்லுதே!

என்னய்யா சிரிக்கிறே? இப்பத்தான் பல் விளுந்து, மயிர் உதிர்ந்து போச்சி. பவிஷ அளிஞ்சுப் போச்சு. ஏன்ய்யா, யுத்தம் வந்துபோய் அம்பது வருஷம் ஆவப்போவுது இல்லே ஆயிடிச்சா? அன்னி மாதிரியே இருக்க முடியுமா? உனக்கும் தான்-பொக்கை வாயிலே ஜொள்ளு கொட்டுது. ஆனா, ஆசைதான் விடல்லே. இல்லே?

உனக்கே இப்படியிருக்குமே, அப்போத்தி ஆண்களுக்கு எப்படியிருக்கும்! அவங்க நாட்டையும் வீட்டையும் விட்டுட்டு இந்த ஜோல்ஜருங்க வந்தாலும் வந்தாங்க, நான் பேப்பர் படிக்கல்லே ரேடியோ கேக்கல்லே-ஆன எனக்கே தெரிஞ்சி போச்சு-குண்டு விளாமலே நாடு நாசமாப் போச்சு. வந்து மேஞ்சுட்டுக் கொளந்தையைக் கொடுத்துட்டுப் போயிட் டாங்க. இந்த வேண்டாத வினைங்களே என்னா செய்யறது? பெத்து ப்ளாட்ஃபாரத்திலே விட்டுட்டு யார் வீட்டு வாசல் லேனும் வளர்த்துட்டு, இல்லே குப்பைத் தொட்டியிலே கடாசிட்டுப் போ வேண்டியதுதான்! இந்த மாதிரி எத்தினி நானே பார்த்திருக்கேன் தெரியுமா?

‘அடிப்போடீ! மஞ்சாக்கயித்துக்குப் பொறந்தது கந்தல் பாயிலே ஆவ் ஆவ்’னு துடிச்சிட்டுக் கிடக்குது. இந்தப் பாலை அதுக்கு ஊட்டினாலும் அது புளைச்சுக்கும். இதைக் கட்டிக்கிட்டு மாரடிக்கச் சொல்றியா? உனக்குப் பாவம் பொங்குதுன்னா நீயே வெச்சு சீராட்டிக்கோயேன்!

அந்தப் பேச்சும் நியாயம் தானே! வவுத்துப் புள்ளையே பாப்பியா? வேணாமிலே முளைச்சதை வளப்பியா? சுமந்து பெத்ததாச்சேன்னு நியாயம் பேசறியா? சிரிப்பு வருது.

சுமக்காமலே பெக்க முடியுமாய்யா?