பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 : லா. ச. ராமாமிர்தம்

இப்போ பேச்சுக்குச் சொல்றேன். ஆனா திசமான பேச்சு யுத்தம் முடிச்சு அப்பனும் ஆயும் தெரியாத புள்ளே ஒண்ணு அஞ்சு வயசுலே ப்ளாட்பார்த்துலே கிட்டுப் புள்ளி ஆடிச்சுன்னா அது என் மவனாக் கூடயிருக்கலாம். பாண்டி யாடினால் என் பொண்ணு, என் மக்கள்னு நெஞ்சுலே நெனைக்கலாம். வெளியே சொல்லிக்க முடியுமா?

யுத்தம் வந்தாலும் வந்தது, பட்டணம் இப்பிடித்தான் சிரிச்சுப் போச்சு. யுத்தப் பொறப்புங்கன்னு ஒரு தனிப் புள்ளைப் பயிரே நாட்டுலே உயிராயிடுச்சு. இந்தப் புள்ளைங்க கருவிலேயே கலைச்சுது போக, பொறந்தவுடனே செத்தது இல்லே சாவடிச்சது போக மிச்சம் எங்கெங்கே எப்டி எப்டி வளந்தாங்களோ, நல்லபடியா வளந்து உருப்படியா ஆள் ஆனாங்களா, இல்லே கேடிங்களா மாறி ஜெயிலுக்குப் போய்ப் போய் வராங்களா, குத்து கொலையே செஞ்சுட்டுத் தூக்கிலே தொங்கினாங்களா, கொடுத்தவ னுக்கும் தெரியாது பெத்தவளுக்கும் தெரியாது. எங்களுக்கு அந்த நேரத்துக்கு ஒடம்பே வித்ததுதான் தெரியும்.

ஒரு நெனப்புலே ஐயா, மனசு ஐயோன்னுதான் இருக்குது.

ஆனா ஒண்னு. யுத்தக் கணக்குலே நல்லா சம்பாரிச் சோம். நேரம்தான் பத்தல்லே. தண்ணி தாண்டி வந்தவன் துட்டை எண்ணிப் பாக்கமாட்டான். அள்ளி வீசி எறிஞ் சுட்டுப் போவான். நம்மவன் தான் சாவு கிராக்கி.

சம்பாரிச்சதெல்லாம் சேத்து வெச்சிருந்தால் இப்போ ஒரு குடிசையானும் போட்டு, கலியாணம் கட்டி, கொளந்தே குட்டி பெத்துகிட்டு கெளரவமா வாழலாம். ஆனால் அத்தினியும் பாவப் பணமாச்சே, தக்குமா? இப்போ ஒரு சுருட்டுக்குத் துட்டுக்கு உன்னைக் கேக்கற நிலவரத்துலே இருக்கேன். கொடேன்! ஒ, சுருட்டுப் புடிப்பேனே! இப்போ