பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் பொம்பளையுமில்லே ஆம்புளையுமில்லே, எதுன்னு எனக்கே தெகப்பாயிருக்குது.

மாலைச் சூரியன் அழுத களையில் எட்டப் பெரிய மொட்டை மாடிகளிடையே விழுந்து கொண்டிருந்தான்.

குட்டைப் பிரம்பால் தொடையைத் தட்டிக்கொண்டு பள்ளங்களை நோட்டம் விட்டுக் கொண்டு அவைகளி னிடையே அவன் நடந்தான். அவனுடைய ப்ரஸன்னம் இந்தப் பள்ளம் சேரியில் ஒவ்வவில்லை. அவனை அவர்கள் வியப்புடன் பார்த்தனர். தங்களிடையே தோளிடித்துக் கிசுகிசுத்துச் சிரித்துக் கொண்டனர்.

“பொலிமாடு அலையுது பார்!” நேரே ஸ்திரிப்பெட்டி அடியிலிருந்து புறப்பட்டாற் போல், கஞ்சி விறைப்பில் மிடுக்காயிருந்தான். மொட மொடக் காக்கி யூனிபாரத்தில் பித்தளைப் பொத்தான்கள் ‘பாலிஷ் ஷில் பளபளத்தன. இந்த வெயில் அவனுக்கு ஆகவில்லை. மேல் தோல் வரண்டாற்போல் முகத்தின் கன்றிய செவப்பில் கண்களின் கடல் நீலம் அளாவியது. மாலைதான் என்றாலும் முகத்தில் வேர்வை கொப்புளித்த படி கைக்குட்டையால் அழுத்தித் துடைக்கத் துடைக்க, முகம் இன்னும் சிவப்பானது. எரிந்தது. கைக்குட்டையை ஒரு தடவை பிழிந்தான்.

திடுக்கென இரண்டு நாய்கள் பயங்கரமாய்ச் சண்டை யிட்டுக் கொண்டு, குரைத்துக் கொண்டு அவன் மேல் விழுந்தன. சட்டென எட்ட நகர்ந்து கொண்டான். ஒன்றன் கண் குதறிய பாதியில் அறுந்து தொங்கிற்று. ரத்தத்தைத் தரைமண் திட்டுத் திட்டாய் உறிஞ்சிற்று. வசியத்தில் அவை களைப் பார்த்துக் கொண்டிருந்தான். ரத்த வசியம்.

கண் இழந்த நாய் ஊளையிட்டுக் கொண்டு ஒடிற்று.