பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திலோ & 173

அதற்கேற்ப நீண்ட கைகள். அந்தக் கரடி ஆலிங்கனத்தில் வெள்ளையன் திணறினான். சடக்கென மின்னல் வேகத்தில் இரு கைகள் அவன் குரல்வளையில் விழுந்து நெரிக்கத் துவங்கின.

வெள்ளையன் அந்தக் கைகளைப் பிய்க்க முயன்றான். தன் முழங்காலால் நீக்ரோவின் வயிற்றில் இடிக்க முயன் றான். ஆனால் அந்த மரணப்பிடி கிணுங்கவில்லை. அது தனக்கென்றே தனி உயிர் பெற்று விட்டது. கைகளின் வீச்சுக்கோ உடலின் நகர்ச்சிக்கோ, பள்ளத்தின் குறுகல் இருவருக்குமே இடம் கொடுக்கவில்லை.

வெள்ளையனுக்கு விழிகள் பிதுங்கின. வெளிவந்து விடுமோ? பிய்த்துக்கொண்டு வெளிவந்துவிடும் போல், ரத்தம் முகத்தில் சதைக்கடியில் முட்டிற்று. மூச்சு மூச்சு!! திண்டாடினான்.

தன் முகத்தை, கண்களை, விரல்களுக்குக் கிடைத்த இடத்தில், வெள்ளையன் கைகள், மூழ்குப்பிடியில் பிராண்டின இடங்களில், ரத்தம் பாளம் பாளமாய்க் கசிவதை அந்த வலியை நீக்ரோ உணரவில்லை. அவன் உடல், ஆவி, அகம், புறம் எல்லாம் ஓர் எண்ணம், ஒரே எண்ணத்தின் குறி-கழுத்தின் முறிவின் முனைந்த தருணத் தின் தவமாகி, ஒருவிதமான பரவசத்தில் ஆழ்ந்தான்.

சட்டென்று ஒரு தும்மல் சத்தம். நீக்ரோவின் முகம் ஆச்சர்யத்தில் கோணிற்று. பற்கள் இளித்தன. கழுத்தின் மேல் அவன் பிடி தளர்ந்தது. எதிரி மேல் சாய்ந்தபடி, மெதுவாய்ச் சரிந்து, காலடியில் பஸ்பமாய் குமுங்கிப் போனான்.

ஆங்கிலேயனுக்கு மூச்சு இரைத்தது. சிதறுண்ட நினைவு