பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெத்தென்று ஒரு முத்தம் * 177

இருந்துண்டே, பதில் கூடச் சொல்ல முடியாமல், அந்த அழும்பே’ என்று அலுத்து அடங்கிவிடுவாள்.

ஆமாம், வீட்டில் அப்பாவைத் தவிர ஆண்பிள்ளை கிடையாது. வீட்டில் தடித்தடியா ரெண்டு பெண்கள் இருக்கறதுக்கு அம்மாவுக்கு எவ்வளவோ ஒத்தாசையா இருக்கலாம். இந்த வயசில், இந்த உடம்பில் வேளைக்கொரு கோளாறுடன் அம்மாவே ஏன் சமைக்கனும்? முறை போட்டுக் கொண்டு நாங்கள் சமைக்கக் கூடாதா? சமையல் ஒண்ணுதானா? சுத்துக் காரியம் இல்லியா? தோட்டத்துக்குத் தண்ணிர் பாய்ச்சலாம். கீதா கடை கண்ணிக்குப் போகலாம். நான் போவது நினைக்க முடியாத காரியம். வேலைக் காரியை அவள் வரும் ஒழுங்குக்கு ஒரு வழியா நிறுத்திட்டுப் பற்றுப் பாத்திரம் தேய்க்கலாம்.

இப்படியெல்லாம் நினைக்கும்போது, நன்னாத்தா னிருக்கு. மனசுக்கு ஒரு சுகம்கூட இருக்கு. ஆனால் எண்ணு வதில் கால் பாகமேனும் செயல்னு வரும்போதுதான் உடலின் வணங்காத்தனம் தெரியறது. மனம் அலுக்கறது. அது கூட இப்போ நின்னு போச்சு. அத்தனையும் அம்மா தலையில்தான்னு விடிஞ்சு போச்சு. ஆனால் அவளும் செய்ய விடமாட்டாள். திட்டிண்டேனும் அவளே செஞ்சுண் பாத்தான் அவளுக்குத் திருப்தி.

நானாவது நினைக்கிறேன். கீதா அதுகூட மாட்டாள். வீட்டில் இல்லாத வேளை போக மிச்சத்துக்கு எப்படித்தான் அலுக்காமல் கண்ணாடி எதிரில் அத்தனை நேரம் உட் காந்துண்டு இருக்க முடியறதோ? அதுவும் அப்பாவை நச்சரிச்சு, அந்த ஆள் உயர பெல்ஜியம் வீட்டுக்கு வந்ததி லிருந்து. அதை அந்த அறையையே அவளே மானியம் எடுத்துக் கொண்டுவிட்டாள். அதன் எதிரே நின்னுண்டு அப்படித் திரும்பிப் பார்த்துக்கறதும், இப்படி இடுப்பை