பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 & லா. ச. ராமாமிர்தம்

வளைக்கறதும், புருவத்தை நெரிக்கறதும், உதட்டைத் கோணிக்கறதும்-அவள் சேஷ்டைகள் அவளுக்குத்தான் ப்ரீதி.

ஒருமுறை, அதுபற்றி அவளிடம் சொன்னபோது, நீ இருக்கற லக்ஷணத்துக்கு உனக்கு அதுயை வேறேயா? என்று விட்டாள். துடிச்சுப் போயிட்டேன். அம்பு என்பது இதுதானா? கத்தியை விடக் கொடுமையாயிருக்கே! என் மெளனமான வேதனையைப் பார்த்து அவளே பயந்துட்டா ‘உன்னை நான் அப்படிச் சொல்லியிருக்கப்படாதோடி? என்று ஆயிரம் கேட்டுண்டாலும், அவளுடன் அந்த ஒர் அனுபவம் போதும்னு ஆயிடுத்து. அவள் வழிக்கே போவ தில்லை, அழகு படைச்சவாளுக்கே நாக்கில் நரம்பு இருக் காதோ? ஆனால் அவளைக் குற்றம் சொல்ல நான் யார்? ஆனால் கோமதி, சிலையடித்த மாதிரி இப்போது உட்கார்ந்திருந்த நிலையில் அவள் அழகு கடைந்தெடுத்த சாஸ்திரியமாகவே (classic) இருந்தது. நூல் பிடித்த மாதிரி, அந்த நெற்றிக் கோடின் வளைவும், செதுக்கிய மூக்கும் உதடுகளும் சற்றுக்கூரிய மோவாயும்-அந்த முகமே மேகத் தினின்று பிதுங்கியது போன்று, கூந்தலின் அடர்ந்த இருட்டும்-அறை உள்ளே நுழைந்தவர் பிரமித்துப் போவர். ஒவ்வொரு புகைப்படக்காரனுக்கும் ஆனந்தம் அந்த profile.

மாடி ஏறிவரும் சப்தம். யார்? அப்பாதான். “என்னப்பா, இன்னிக்கு சுருக்க?” சொக்காயைக் கழற்றி மாட்டிவிட்டு, பக்கத்து நாற்காலி யில் உட்கார்ந்தார். -

“லேசாத் தலைவலி கேட்டுண்டு வந்துட்டேன். நீ எப்படி இருக்கே?

“எனக்கென்ன கேடு?”