பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெத்தென்று ஒரு முத்தம் : 179

கோமதியின் பார்வை, அப்பா மேல் கனிவுடன் தங்கிற்று. அப்பாவோடு இருக்கும்போது தன் இதயச் சுவர்களில் டால் அடிக்கிற மாதிரி தோன்றும். அதன் ஆறுதலை வேறெப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. அப்பா கிடைக்க அம்மா கொடுத்து வெச்சிருக்கணும். எனக்கும் அகமுடையான் அப்பா மாதிரி கிடைக்க மாட்டானா என்று அவள் எண்ணியதுண்டு. பிள்ளையார் தன் அம்மா மாதிரி பெண்டாட்டிக்குக் காத்துண்டு தெருத் தெருவா உட்கார்ந்துண்டில்லையா? அது போல, நான் தெருத்தெருவா நிக்க முடியுமா! நின்னாலும் எனக்குக் கிடைப்பானா?

“என்ன கண் தளும்பறது. வாய் புன்னகை பூக்கறது. அதென்ன காம்பினேஷன்?”

“இல்லேப்பா நெனச்சுண்டேன். உங்களுக்குக் கோவமே வராதா?”

“கோவமா, அதென்ன வீசை என்ன விலை?”

“விசை?”

“ஒ, அது எங்கள் காலத்து எடை சரி கிலோ என்ன

  • ?

விலை?

அம்மா காப்பியுடன் வந்து, மேஜை மீது வைத்துவிட்டு, அவளை முறைத்துவிட்டுச் சென்றாள்.

அப்பா, கொஞ்சம் டபராவில் ஊற்றி அவளிடம் கொடுத்தார். இது அவர்களிடையே நித்தியப்படி சடங்காவே ஆகிவிட்டது. அப்பா அவளுக்குத் தோஸ்து! அப்பா தன் காப்பியைப் பருகிக் கொண்டே

“கோபத்தை வெச்சுண்டு என்னம்மா பண்றது? அதுவும் இந்த வயசில்? ஆனால் இப்பத்தான் கோபம் அதிகமா வரது. எல்லாம் கையாலாகாத்தனம்தான். தோள் கொடுக்கப்