பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 : லா. ச. ராமாமிர்தம்

புள்ளையிருக்கானா? இந்தக் காலத்துப் பசங்க தோள் தூக்கத்தான் காத்திருக்கான்கள். எல்லாத்துக்கும் கொடுப் பனை வேணும்.

இப்படி நமுட்டு விஷமமா, அத்தோடு லேசா விசனமும் விரக்தியும் குழைந்திருந்தால் அப்பா மூடுலே இருக்கார்னு அர்த்தம்.

மருதாணிக் கிளைக்கப்பால் சிந்தித்துக்கொண்டு, அப்பா தனக்குத்தானே போல்

“தன்னை அறையப் போகும் சிலுவையை யேசுநாதர் தாங்கிச் சென்றது, என் மனசை மிக்க ஈர்த்த சம்பவம். நாளுக்கு நாள் அதன் தாத்பர்யம் விரிய விரிய, ஆச்சர்யமா யிருக்கிறது. அவனவனுக்கு அவனுடைய சிலுவை. ஏன் உன் சிலுவையை நீ தாங்கிண்டு இல்லையா? அவர் கண்கள் அவள் மேல் பால் சுரந்தன. “கோமு, உன்னைப் பத்தி நான் என்ன நெனச்சிண்டிருக்கேன்னு தெரியுமா? வேண்டாம். சொன்னால் சென்டிமெண்டலாக் கொழ கொழத்துப் போயிடும். உன் சிலுவை மஹத்தானது. சரி, கீதா எங்கே?”

கையை விரித்தாள். உண்மையிலேயே அவளுக்கு என்ன தெரியும்?

யோசனையில் ஆழ்ந்தார். “கீதா கண்ணில் படும்படி, வீட்டுள் இன்னும் கொஞ்சம் இருந்தால் நல்லது. நீ சற்று வெளியே போானால் நல்லது. சூரிய வெளிச்சம் மேலே பட வேண்டாமா?”

“சூரிய வெளிச்சம் என்மேல் படாமலா இருக்கேன்? அதான் தோட்டம் இருக்கேப்பா?

“Youfool! நான் இந்தச் சூரியனைச் சொல்லல்லே. சரி, சந்தியாவந்தனம் பண்ணனும்.”