பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

மெத்தென்று ஒரு முத்தம் * 181

அப்பா கீழே போய் வெகு நேரமாயும், கோமதி நிலை கலையாமல் உட்கார்ந்திருந்தாள்.

மருதாணிக் கிளையில் அணில்கள் ஒடிப் பிடித்து விளையாடின. அவை உச்சரித்த சப்தங்கள் கிண் கிண்ட் என இனிய உலோக ஒசையில் தெறித்தன. ஆகாயத்தில் ஒரு பறவைக் கூட்டம் அணிவகுத்துச் சென்றது. அறையுள், சுவர்களின் உயரங்களில், கூரை விட்டத்தில் மின்விசிறி மேல், இருள் பந்துகள் தேங்க ஆரம்பித்துவிட்டன.

‘குபிர் என ஏதோ மலர் மணம். மாலை மலர்ந்த பூ மனம் லேசான போதையில் அமிழ்ந்தது. அதன் சோம்பிய ஒட்டத்தில் அவள் ஒரு காயிதக் கப்பலாய், அடிவாரத்தில் தவழ்ந்த அலைக்கு அலை ஏதேதோ எண்ணங்களை ஏற்றிக் கொண்டு மிதந்தாள். கோமதி சுகானுபவத்தில் ஆழ்ந்தாள். அப்பா மஹான். இந்த வயதிலும் பொழுதை வீணாக்க வில்லை. சர்க்காரிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் ஒரு மர வியாபாரியிடம் கணக்குப் பார்க்கிறார். நாள், கிழமை நல்லது பொல்லாது கிடையாது. பிழிந்து எடுக்கிறான். வேலைக்குப் போகாமல் முடியாது. குடும்பம் நடத்தப் போதாது. குதிராட்டம் இரண்டு பெண்கள் இருக்கோமே! அவளுக்கு வேலைக்குப் போக ஆசைதான். ஆனால் யார் கொடுப்பார்? வேணும்னா பீடி சுற்றலாம். சிரிப்பு வந்தது. அதற்கும் அவள் தயார்தான். விடமாட்டாளே! படிப்பு எட்டாம் வகுப்புடன் நின்று விட்டது. சக மாணவி களின் கொடுமை, அனுதாபம்-அந்த அனுதாபத்துக்குக் கொடுமையையே தாங்கிக்கலாம்-புறங்கைக்குப் பின்னால் மறைத்த சிரிப்பு-அவளை ஒதுக்கல்-தாக்குப் பிடிக்க முடிய வில்லை. பள்ளி நின்றுவிட்டாள். இப்ப நினைத்துப் பார்க்கையில், பாதிக்கு மேல் தானாக நினைத்துக் கொண்ட தாத்தான் தெரியறது. ஆனால் தாழ்வு மனப்பான்மை