பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெத்தென்று ஒரு முத்தம் * 183

கீதா சற்றுப் பின்வாங்கினாள். அம்மாவுக்கு இத்தனை கோபம் வந்து அவளே பார்த்ததில்லை. “கற்புன்னா உனக்கு அத்தனை கிள்ளுக்கீரையாப் போச்சா? அதைப் பத்தி உனக்கு என்னடி தெரியும்?”

“தெரிஞ்சுதான் பேசறேன். என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். இது பட்டணம் அம்மா, கிராமம் இல்லை. கிராமமோ வம்புக் கூடமோ அங்கேதான் எதுக்கும் யார் மேலும் சந்தேகம். அந்த பாஷையைத்தான் நீ பேசறே.” +.

கோமதி கீதாவை நம்பினாள். ஆம், கீதாவுக்குத் தன்னைக் காப்பாத்திக்கத் தெரியும். ஆமா, கீதாவுக்கு எதிலுமே ஆழமான பற்று கிடையாது. அவளுக்கு எல்லாமே பொழுதுபோக்கு மனசை பொம்மை மாதிரிக் கீழே போட்டு உடைத்துவிடுவாள். எதுவுமே don'tcare. நன்னா உடுத்தனும், நன்னா சுத்தணும். அரட்டை அடிக்கணும். எல்லாரையும் பயன்படுத்திக்கணும். தர்பார் நடத்தணும். ஆமாம், கீதா சொன்னமாதிரி இது பட்டணம்.

“Hulio Madras!”

“Hullo #grr!”

“ஹாய், வினோத்!”

வினோத், விக்ரம், விகாஸ், என்ன வினோதமான பெயர்கள். மாலைப் பொழுதுக்கென்று ‘ஹாய், ஹாய், யா, யாச்- இப்படி ஒரு பாஷை எனின் சரளமாய் அதில் கீதா நீந்துகிறாள்! கீதா பாராட்டுக்குரியவள்தான். பருவத்தின் அனுகூலங்கள் அவளிடம் செறிந்திருக்கின்றன. அதை அவள் உணர்ந்து, அவைகளை நன்கு பயன்படுத்துகிறாள். வாழ்க்கையை அனுபவிக்கிறாள். அனுபவிக்க அவளுக்கு த்ராணியிருக்கு. எனக்கு இல்லையென்றால் அவளைப்