பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 & லா. ச. ராமாமிர்தம்

பார்த்துப் பொறாமைப்படுவதில் என்ன அர்த்தம்? ஆம், அப்பட்டமாய், அம்மணமாப் பார்த்தால் பொறாமை யில்லாமல் பின் என்ன? அம்மணம் என்ற சொல் மனதில் தோன்றினதும், வெட்கத்தில் கன்னங்கள் குறுகுறுத்தன. இடது கன்னத்தைத் தடவிக் கொண்டாள்.

ஒருநாள். நள்ளிரவில் விழித்துக் கொண்டாள். அம்மா வும் அப்பாவும் பேசிண்டிருக்கா. (கண்ணாடி அறை கீதாவின் சயனக்ரஹம்)

“இதோ பாருங்கோ எனக்குத் தூக்கமே ஒரு மாஸ்மா யில்லை. கீதாவைப் பத்தி வயத்தில் நெருப்பைக் கட்டிண் டிருக்கேன். ஒரு கட்டுக்கும் அடங்க மாட்டேங்கறா. எங்களுக் கிடையே பகையே வந்தாச்சு”

‘அலமு, நீ அவளை நம்பணும். உலகத்தை நம்பணும். நீ நினைக்கிற மாதிரி உலகம் அத்தனை கெட்டதில்லை.”

“நீங்கள் நம்பிண்டிருங்கோ. உங்கள் தலையில் நீங்களே கை வெச்சுண்டு ஒரு நாள் பஸ்மாசூரம் ஆறப்போத்தான் உங்களுக்குத் தெரியப் போறது. அவளைக் கையைப் புடிச்சு யாரிடமேனும் கொடுத்துட்டாத்தான் எனக்கு நிம்மதி. அங்கே எக்கேடு கெட்டுப் போகட்டும், தாலியே கவசம்னு.”

“இப்போ என்ன உன் எண்ணம் நன்னாயிருக்கா? அப்பா சிரித்தார். ‘அங்கே குடி கெட்டாலும் நீ தப்பிச்சுக் கணும்.”

“ஆமா, அப்படித்தான் வெச்சுக்கோங்களேன்! என் கேள்விக்கென்ன பதில் சொல்றேள்?”

“என்ன கேள்வி?” “அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் முடிச்சாகணும்.”

“என்ன பேத்தறே, அவளுக்கு முன்னாலே ஒருத்தி யிருக்காளே!”