பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெத்தென்று ஒரு முத்தம் * 189

“பூ! ஒரு முத்தத்தில் என்ன இருக்கிறது? What is in a Kiss?” என்று கீதா சிரித்து ஊதி விடுவாள்.

ஆனால்

அவளுக்கு ஏழு வருட நித்திரையிலிருந்து எழுந்த இளவரசி மாதிரியிருந்தது. நெஞ்சில் புது ஊற்றுப் பெருக்கெடுத்து, உள் ரணத்தையெல்லாம் ஆற்றிக் கொண்டு பாய்ந்தது!

அப்பா சொன்ன மாதிரி எனக்கு ஒருத்தன் பிறந்திருக்க மாட்டானா? ஒண்ணுமே வேண்டாம், ஒரு குருடனைப் பண்ணிக்கறேன். அது பிறவிக் குருடோ. பின்வந்த குருடோ, ஒருவருக்கொருவர் வாழ்வு தந்து கொண்டிருப்போம். என் கன்னத்தைத் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும். எப்படியும் கண் பார்த்து, பார்க்கும்போதெல்லாம் படும் கொடுமையைவிடக் குறைஞ்சுதானிருக்கும்.

அன்று பூரா, அடுத்த நாளும், பிறர் என்ன இவளுக்கு என்று வியக்கும்படி, அவள் சந்தோஷமாவே இருந்தாள்.